2018-ம் ஆண்டுக் கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இசைஞானி இளையராஜா வுக்கு வழங்கினார்.
2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகை யில் இன்று நடை பெற்று வருகிறது.
பத்ம விருதுகள் அறிவிக்கப் பட்டவர்களு க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறார்.
இசைஞானி இளையராஜா 2018-ம் ஆண்டுக் கான பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் கையிலிருந்து பெற்றார்.
இன்றைய தினம் வழங்கப் பட்ட முதல் விருது அவருக்கு தான் வழங்கப் பட்டது.
மேலும், தமிழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் நாகசாமி, இசைக் கலைஞர் அரவிந்த் பாரிக்,
யோகா கலைஞர் நானம்மாள் உள்ளிட்ட அனைவரு க்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையால் விருதுகள் வழங்கப் பட்டன.
3 பேருக்கு பத்ம விபூஷண் விருதும் 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும் 72 பேருக்கு பத்மஶ்ரீ விருதும் குடியரசுத் தலைவர் கையால் வழங்கப் பட்டன.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.
Thanks for Your Comments