ஏழைகளுக்காக ஒன்பது பள்ளிகளை நடத்தி வரும் ரிக்‌ஷா ஓட்டுநர் !

0
கைரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர், ஏழைக் குழந்தை களின் கல்விக் காக மூன்று தொடக்கப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், 
ஏழைகளுக்காக ஒன்பது பள்ளிகளை நடத்தி வரும் ரிக்‌ஷா ஓட்டுநர் !
ஒரு மேல்நிலைப் பள்ளி என ஒன்பது பள்ளிகளைத் திறந்து, பலரு க்கும் கல்வி கிடைக்க உதவி வருகிறார் என்பது ஆச்சர்ய த்தை ஏற்படுத்தி யிருக் கிறது.

இந்தியா வில் அரசியல் பின்புலமோ அல்லது தொழில் பின்புலமோ இருந்தால் போதும் பெருமள வில் முதலீடு செய்து பள்ளியை ஆரம்பித்து, `கல்வித் தந்தை' ஆகி விடலாம். 
ஆனால், குடும்ப வறுமை காரணமாக தனக்குச் சரியான கல்வி கிடைக்காத தால் ஏற்பட்ட கஷ்டத்தை உணர்ந்து, 

ஏழைக் குழந்தைகள் அனைவரு க்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்த்து ஒன்பது பள்ளிகளை நடத்தி வருகிறார் 

அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டம் பத்திர்கண்டி பகுதியில் அமைந்துள்ள மதோர்பாண்ட் கிராமத்தைச் சேர்ந்த ரிக்‌ஷாக்காரர் அகமது அலி.

குடும்ப ஏழ்மை காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் கைரிக்‌ஷா ஓட்டி வறுமையை விரட்டி யுள்ளார் 
அகமது அலி. தன்னைப் போல் ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருக்கக் கூடாது என்பதற் காகவே, 

தன் பெயரில் இருந்த நிலத்தை விற்று தொடக்கப் பள்ளியைக் கட்ட ஆரம்பித்தி ருக்கிறார். 

கட்டு மானத்தைத் தொடங்கிய போதே பணம் முழுவதும் கரைந்தி ருக்கிறது. 

கட்டுமானப் பணிகள் பாதியில் நின்ற போது, உள்ளூரில் உள்ள மக்கள் நிதி உதவி செய்யும் படி ரிக்‌ஷா வில் அலைந்த அகமது அலிக்கு, பலரும் உதவிக் கரம் நீட்டி யுள்ளனர். 
ஸிலோன் எக் பரோட்டா செய்வது
இவர்கள், பள்ளியின் கட்டுமானப் பணி முடிந்தவுடன் தங்களுடைய பிள்ளை களை அகமது அலியின் பள்ளிக்கு அனுப்பி வைத்திருக் கின்றனர்.

அகமது அலியின் பள்ளி குறித்த விவரங்கள் சுற்று வட்டாரப் பகுதியில் பரவியிருக் கிறது. 
சுற்று வட்டார மக்களும் அகமது அலியிடம் தங்கள் பகுதியிலும் பள்ளி திறக்க கோரிக்கை வைத்தனர். 

இந்தக் கோரிக்கையை ஏற்று பல பள்ளி களைத் தொடங்கி யிருக்கிறார் அகமது அலி. 

இவர் தொடங்கிய பள்ளிகளில் மாணவர் களின் எண்ணிக்கை அதிகரிக்க, தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளி களாகவும், 

நடுநிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளி களாகவும் தரம் உயர்த்தப் பட்டிருக் கின்றன. 

தற்போது, மூன்று தொடக்கப் பள்ளிகள், ஐந்து நடுநிலைப் பள்ளிகள், ஒரு மேல் நிலைப் பள்ளி என ஒன்பது பள்ளிகளை நடத்தி வருகிறார் அகமது அலி.

தன்னுடைய பள்ளியில் படித்த மாணவர்கள் உயர் கல்விக் காகக் கல்லூரி இல்லாத குறை இருப்பதைக் கண்ட அகமது அலி, தற்போது கல்லூரி தொடங்கு வதற்கு முயன்று வருகிறார். 
வெயிலைச் சமாளிக்க உங்களுக்காகவே சில டிப்ஸ்
`கல்லாமை ஒரு பாவம். இந்தப் பாவம் எல்லா வகைகளி லும் பல்வேறு நோய் களையும் ஏற்படுத்தும். 
பெரும் பாலான குடும்பங்கள் அடிப்படை கல்வியைப் பெறாமல் பாதிப்புக் குள்ளாகின் றனர். 

எனக்கும் வயதாகி விட்டது. குறைந்த பட்சம் என்னுடைய கிராமத்தை யாவது முன்னேற்ற வேண்டும். 

அதுவும் கல்வியின் வழியே முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என ஆசைப் படுகிறேன். 

பள்ளி மாணவர்கள், நன்கு படித்து நல்ல வேலை க்குச் செல்ல வேண்டும். படிக்காமல் யாரும் கஷ்டப்படக் கூடாது" என்கிறார் அகமது அலி.

இவரது பள்ளியில் படித்த மாணவர்கள் பலரும் நல்ல வேலை வாய்ப்பைப் பெற்று பொருளாதார அளவில் முன்னேறி வருகின்றனர். 

அகமது அலி ஒன்பது கல்வி நிறுவனத்தை நடத்தி வந்தாலும், இன்னமும் ரிக்‌ஷா ஓட்டுகிறார். `ரிக்‌ஷா ஓட்டுவ தால் வருத்தப்பட வில்லை. 

ஒவ்வொரு தொழிலு க்கும் மதிப்பும் மரியாதையும் உள்ளது. இந்த ரிக்‌ஷா ஓட்டுவது தான் என்னைத் தனித்து அடையாளப் படுத்தியிருக் கிறது" என்கிறார்.
ரிக்‌ஷா ஒட்டுநர்

அகமது அலி எந்தப் பள்ளியி லும் தன்னுடைய பெயரைச் சேர்த்த தில்லை. ஊர் மக்களின் கோரிக் கையை ஏற்று மேல்நிலைப் பள்ளியில் மட்டும் தன்னுடைய பெயரைச் சேர்த்திருக் கிறார். 
கீழ் வயிற்று தசையை குறைக்க இத செய்யுங்க !
இவருடைய சேவையைக் கண்டு வியந்த பதர்கஞ்ச் எம்.எல்.ஏ கிருஷ்னென்டு பவுல், அகமது அலி அபூர்வ மான நபர் என்று பாராட்டி, 

மத்திய சிறுபான்மை அமைச்சக த்தின் மேம்பாட்டுத் திட்ட நிதியி லிருந்து 11 லட்சம் ரூபாய் மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட தந்திருக் கிறார்.

வறுமை, அகமது அலியின் கல்வியை வேண்டு மானால் தடுத்திருக் கலாம்; `கல்வி, எல்லோரு க்கும் கிடைக்க வேண்டும்' என்கிற அவரின் கனவு நிஜமாவதை ஒருபோதும் தடுக்க முடியாது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings