நடராசன் மறைவை அடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்பதற் காக அவரது மனைவி சசிகலா 15 நாட்கள் பரோலில் வெளி வந்துள்ளார்.
கணவர் நடராசன் மறைவை அடுத்து சிறையில் உள்ள சசிகலா இன்று காலை 8.30 மணிக்கு தனது வழக்கறி ஞர்கள் அசோகன் மற்றும் சுரேஷ் மூலமாக 15 நாள் பரோல் கேட்டு விண்ண ப்பித்தார்.
முன்னதாக சிறைத் துறை தரப்பில் குறைந்தபட்சம் 7 பரோல் வழங்க முடியும், சசிகலா தரப்பில் கேட்டுக் கொண்டால்
கூடுதலாக பரோல் நாள்கள் கிடைக்கும் என்று சிறை கண் காணிப்பாளர் சோமசேகர் தரப்பில் கூறப்பட்டது.
அதன்படி சசிகலா நடராசனுக்கு நேரடியான வாரிசு கிடையாது, அவர்களின் குல வழக்கப்படி
எல்லா சடங்கு களையும் சசிகலாவே செய்ய வேண்டி உள்ளதால் 15 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று மனு செய்தனர்.
நடராசனின் இறப்புத் தகவலை உறுதி செய்து கொண்ட சிறை கண்காணிப் பாளர் சோமசேகர், சிறை விதி முறைகளின் படி சசிகலா வின் விருப்பத்தைக் கேட்டுப்
பதிவு செய்து கொண்டு சிறை விதிமுறை களைக் குறிப்பிட்டு 15 நாள்கள் பரோல் வழங்கினார். சாலையில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் வழியாகவே தஞ்சாவூர் செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
நடராசன் இறுதிச் சடங்களில் கலந்து கொள்ள இளவரசியும், சுதாகரனும் பரோல் கிடைக்குமா என்று சசிகலா தரப்பு வழக்க றிஞர்கள் விசாரித்த போது
அதற்கான வாய்ப்புகள் இல்லை, விண்ணப் பித்தாலும் மனுக்கள் நிராகரிக் கப்படும் என்ற தகவலை அடுத்து இளவரசியும், சுதாகரனும் பரோல் கேட்கும் முடிவைக் கை விட்டனர்.
இன்று காலை முதல் பரப்பன அக்ரஹாரா சிறை வாளகத்தில் புகழேந்தி மட்டுமே சிறை நடை முறைகளை வழக்கறிஞர்கள் மூலம் மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத் தில் இருந்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. தரப்பில் ஒருவர் கூட சிறை வளாகம் பக்கம் தலை காட்ட வில்லை.
ஆனால், சசிகலா வுடன் தஞ்சாவூர் வரை செல்ல கிருஷ்ணகிரி, தர்மபுரியில் இருந்து நூற்றுக் கணக்கான கார்களில் கட்சி நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
Thanks for Your Comments