நிழலுக்கு நேர்ந்தது, நிஜத்திலும் அரங்கேறியது - நடராசன் !

0
தஞ்சாவூர் தூய அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் நடராசன் படித்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் இது!

நிழலுக்கு நேர்ந்தது, நிஜத்திலும் அரங்கேறியது - நடராசன் !
எம்.ஜி.ஆர் நடித்த ‘ஜெனோவா’ படத்தின் பாட்டுப் புத்தகத்தை பள்ளித் தோழன் ஒருவன் வைத்திருக்க... அதை ஆர்வத்துடன் வாங்கிப் படித்தார் நடராசன். 

‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என்ற வாசகத் துடன் படத்தின் கதைச் சுருக்கம், பாட்டுப் புத்தக த்தில் எழுதப் பட்டிருந்தது. 

‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்வி சிறுவனாக இருந்த நடராசன் மனதில் எழுந்தது. 

‘ஜெனோவா’ படத்தைப் பார்த்து விடை தெரிந்துகொள்ள நினைத்தார். 

அப்பா மருதப்பா மண்ணையாரி டமும், தாய் மாரியம்மா ளிடமும் பணம் கேட்கத் தயக்கம். காரணம், பொருளாதாரச் சூழல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்ச த்தில் தான் நடராசன் படிப்பார். ‘‘கணக்குப் பிள்ளை வேலைக்கா போகப் போறே...
படிச்சுக் கிழிச்சது போதும், படுடா!’’ எனச் சொல்வார், நடராசனின் பாட்டி அப்பாயி. 

நடராசன் உடல் நிலை மீதான அக்கறை அல்ல அது. கிடைக்காத மண்ணெண்ணெய் வீணாகிறதே என்கிற கவலை தான் காரணம். 

மண்ணெ ண்ணெய் செலவுக்கே கணக்குப் பார்க்கும் குடும்பத் தினர், சினிமா வுக்குப் போவதற்குப் பணம் தருவார் களா? 

ஆனாலும், ‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என்கிற கேள்விக்குப் பதில், வெண் திரையில் தானே இருக்கிறது. 

எப்படியோ பணத்தைத் திரட்டி, தஞ்சை யாகப்பா தியேட்டரில் ‘ஜெனோவா’ படத்தைப் பார்த்தார் நடராசன். 

காட்டுப் பகுதி யில் துவண்ட நிலையில் எம்.ஜி.ஆர் தள்ளாடி, ஊர்ந்து செல்வார். 

இன்னொரு பக்கம் கதாநாயகி ‘எனை ஆளும் மேரி மாதா... துணை நீயே தேவத் தாயே!’ என்று பாடி வருவார். 
திடீரென இருவர் மீதும் வெளிச்சம் பாய... பிரிந்திருந்த இருவரும் இணை வார்கள். 

மகிழ்ச்சிப் பெருக்கால் வார்த்தைகள் வராமல், இருவரின் கண்கள் மட்டும் பேச... படம் முடியும். 

‘பிரிந்தவர் கூடும்போது பேச்சு வராது’ என்பதை, அந்தச் சின்ன வயதில் நடராசன் தெரிந்து கொண்டார்.

‘பிரிந்தவர் கூடினால் ஏன் பேச முடியாது’ என சிறு வயதில் கேள்வி எழுப்பிய நடராசன், சசிகலாவை ஜெயலலிதா வால் பிரிந்திருந்தார். 

ஜெயலலிதா வுக்குத் தெரியாமல் இருவரும் சில நேரங்களில் சந்தித்துக் கொண்ட தாகப் பேச்சுகள் எழுந்தன. 
ஆனால், அவர்கள் அப்படிச் சந்திப்பு நடந்ததற் கான அதிகாரபூர்வ படங்கள் ஏதும் வெளியாக வில்லை. 

சொத்துக் குவிப்பு வழக்கில் குன்ஹா தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த பிறகு, பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா தள்ளப் பட்டார். 

அந்த நேரத்தில் சிறை வளாகத்தில் இருந்த நீதி மன்றத்தில் சசிகலாவைப் பார்த்த நடராசன், கண்ணீர் சிந்தினார். 

அங்கே இருவரும் பேச முடிய வில்லை. ‘பிரிந்தவர் கூடினால் பேசவும் முடியுமோ?’ என நிழலுக்கு நேர்ந்தது, அன்றைக்கு நிஜத்திலும் அரங் கேறியது.

1973-ம் ஆண்டு நடராசனின் திருமணம் நடந்தது. அந்தத் திருமண த்தை நடத்தி வைத்தது அன்றைய முதல்வர் கருணாநிதி. 

நடராசனும் சசிகலாவும் 1990-ம் ஆண்டு வரையில் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார்கள். 
சசிகலா போயஸ் கார்டனில் குடிபெயர்ந்த பிறகும் அங்கே தான் நடராசனும் இருந்தார். 

ஜெயலலிதா வோடு ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து போயஸ் கார்டனில் இருந்து 1991-ம் ஆண்டு நடராசன் வெளி யேறினார். 

'நடராசனுடன் கட்சிக் காரர்கள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது'' என ஜெயலலிதா அறிவித்தார். 

அதனால் நடராசன் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் வசித்து வந்தார். இதனால் சசிகலாவும் நடராசனும் அதன் பிறகு பிரிந்தே இருந் தார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings