பெரியார் உருவ டி-ஷர்ட்டுடன் வந்த தமிமுன் அன்சாரி !

0
சட்டப் பேரவையில் நேற்று தனி ஒருவராக இருந்து ரத யாத்திரை க்கு எதிர்ப்புத் தெரிவித்து சபாநாயகர் முன்பு கொந்தளித்த 

பெரியார் உருவ டி-ஷர்ட்டுடன்  வந்த தமிமுன் அன்சாரி !
மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ இன்று பெரியார் படம் போட்ட டி- ஷர்ட்டுடன் பேரவை க்கு வந்து அதிர வைத்தார்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை நேற்று கேரளா வழியாக தமிழக எல்லை யான செங்கோட்டை வந்தடை ந்தது. 

இதற்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்ட த்தில் ஈடுபட்டன. 

சட்டப் பேரவை கூட்டம் நடந்துவரும் வேளையில் ரத யாத்திரை தமிழகத் துக்கு வந்த தால் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்-ஏ க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினர். 
சட்டப் பேரவையில் கூச்சல் ஏற்பட்ட நிலையில் திடீரெனத் தனது இருக்கை யில் இருந்து எழுந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ- வான தமிமுன் அன்சாரி 

இரண்டு கைகளையும் உயர்த்தி ரத யாத்திரை க்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கோஷ மிட்டதோடு, சபாநாயகர் இருக்கை முன்பு வந்து அமளியில் ஈடு பட்டார். 

இதனால் சட்டப் பேரவை கூட்டம் பரபரப்புடன் காணப் பட்டது. பின்னர் அவர் சட்டப் பேரவையில் இருந்து வெளியேற்றப் பட்டார்.

இந்தப் பிரச்னை ஓய்ந்துள்ள நிலையில் பெரியார் சிலை உடைப்பு சட்டப் பேரவையில் இன்று எதிரொலித்தது. 
பேரவையை நேற்று அதிர வைத்த தமிமுன் அன்சாரி இன்று பெரியார் படம் போட்ட டி- ஷர்ட்டுடன் வந்தார். 

அவரைப் புகைப் படக்காரர்  களும் வீடியோ கிராபர்களும் சுற்றி வளைத்துப் படம் எடுத்தனர். 

அப்போது, பெரியார் சிலையை உடைப்புக்கு எதிராக கோஷ மிட்டார். பின்னர் சட்டப் பேரவை கூட்டத் தில் அவர் பங்கேற்கச் சென்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings