வலிப்பு நோய் தீர என்ன வழி?

0
வலிப்பு நோய் வந்தாலே நமக்கு மனதில் பீதி ஏற்பட்டு விடுகிறது. ஆனால் அந்த வலிப்பு நோய்க்கு வெங்காயம், அகத்திக் கீரை, மிளகு, பனை வெல்லம் ஆகியவை மருந்தாக இருக்கிறது.
வலிப்பு நோய் தீர என்ன வழி?
இதெல்லாம் எங்கோ காடுகளிலோ மலைகளிலோ இல்லை நமது அடுப்பங் கரையில் இருக்கும் சின்ன சின்ன பொருட்களை வைத்து வலிப்பு நோயை எளிதில் போக்கலாம். 

வலிப்பு நோய் தீர என்ன வழி

வெள்ளை வெங்காயத்தை தட்டிச்சாறு பிழிந்து வலிப்பு வந்தவரின் காதில் 2 அல்லது 3 சொட்டு விட்டால் காக்காய் வலிப்பு அடங்கி விடும்.

அகத்திக் கீரை, மிளகு, பசுவின் கோமியம் ஆகிய மூன்றையும் சேர்த்து அரைத்து அடை போல் தட்டி காய வைத்து தூளாக்கி பொடி செய்து நசிய விட (மூக்கில் உறிஞ்சு) வலிப்பு நோய் படிப்படியாக குறையும்.

மாங்கொட்டைக்குள் இருக்கும் பருப்பை வேக வைத்து சாப்பிட்டால் குடல் நோய்கள், மூலநோய், காக்காய் வலிப்பு, கோடை காலத்தில் ஏற்படும் உஷ்ண பிணிகள் போன்றவை தீரும்.

முருங்கை பட்டையை நீர் விட்டு அவித்துச் சாறெடுத்து ரசமாக்கி உணவுடன் சாப்பிட்டுவர குளிர் காய்ச்சல் பாரிச வாயு, காக்காய் வலிப்பு தீரும்.
இரண்டு கிராம் பொரித்த பெரு வெங்காயத்தை பனை வெல்லத்தில் பொதித்து உண்டுவர வாத நோய், மண்டை நீரேற்றம், சன்னி, உதிரச்சிக்கல், 

கீல்வாதம் வெறி நாய்க்கடி, வலிப்பு தொண்டைக் கம்மல், செரியாமை, பேதி, வயிற்றுப் பெருமல், வயிற்று வலி, குட நுண் புழுக்கம் ஆகியவை தீர்ந்து விடும்.

தும்பை இலையை கசக்கி பிழிந்து துளி மூக்கில் விடவும் இரண்டு மூன்று தரம் விட்டு வர காக்காய் வலிப்பு நோய் குணமாகி விடும்.

திராட்சை பழச்சாற்றை தினம் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி அளவு கொடுத்து வர குழந்தை களின் வலிப்பு நோய் தீர்ந்து விடும்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings