தொழில் உரிமம் பெற வழிகள்?

0
அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப்பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக்குட் பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.
தொழில் உரிமம் பெற வழிகள்?
ஒரு மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக் குட்பட்ட பகுதிக்குள் தொழில் தொடங்க வேண்டும் என்றால் அந்த மாநகர, நகர அமைப்பின் மூலம் அனுமதி வாங்க வேண்டும் என்கிறது சட்டம்.

இது தான் தொழில் உரிமம், அல்லது வணிக உரிமம் என்கிறோம். உள்ளாட்சி அமைப்பு களுக்கு முக்கியத் துவம் தரும் சட்டம் என்றாலும், அப்போது தான் நகர எல்லைக் குட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய முடியும்.

தவிர தொழில்வரி போன்றவையும் வசூலிக்க இது வகை செய்கிறது. அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கப் பட்ட தொழில் என்றாலும் மாநகர, நகர எல்லைக் குட்பட்ட பகுதிகள் எனில் இந்த அனுமதியும் வாங்க வேண்டும்.
யாருக்கு தொழில் உரிமம் தேவை?

ஒரு தொழிலை தொடங்கு வதற்கு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் அனுமதி வாங்கி யிருந்தாலும், மாநகர, நகர பகுதியில் தொடங்குப வர்களுக்கு இந்த அனுமதி வேண்டும்.

குறிப்பாக தொழிற் சாலைகள், சேமிப்புக் கிடங்குகள், பதப்படுத்தும் நிறுவ னங்கள், தீப்பெட்டி தயாரிப்பு, அச்சகம், வெல்டிங் பட்டறைகள், பெட்ரோல் பங்க் போன்றவை பிற அரசு துறைகள் மூலம் அனுமதிகள் வாங்கியி ருந்தாலும் நகராட்சி அனுமதியும் வாங்க வேண்டும்.
தவிர உணவு தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கரிகள், பால் மற்றும் இறைச்சி விற்பனை யாளர்கள், பள்ளி, கல்லூரி உணவு விடுதிகள், சமையல் ஒப்பந்தக் காரர்கள் திருமண மண்டபம்,

ஓட்டல், மளிகை கடைகள், தேநீர் கடைகள், குளிர்பான கடைகள், மொத்தம் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களும் இந்த அனுமதி வாங்க வேண்டும்.

அச்சம் மற்றும் அருவருக்கத் தக்க இனங்களில் தொழில் நடத்து பவர்கள் என்றும், உணவு பொருள் தயாரிப்பு மற்றும் சாப்பிடும் நிலை வரை உள்ள

அனைத்து உணவு வணிகர்கள் என்றும், மின்சக்தி மற்றும் டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தி தொழில் செய்பவர்கள் என்றும் பல வகைகளில் இந்த தொழில் களை வகைப் படுத்துகிறது சட்டம்.
சைனீஸ் சால்ட் அண்ட் பெப்பர் டோஃபு செய்வது எப்படி?
தொழில் உரிமம் பெறும் நடைமுறை

விண்ணப்ப தாரர் தங்களது பெயர் மற்றும் தொழில் விவரம், தொழில் நடத்தப்பட உள்ள இடத்தின் முகவரி போன்ற விவரங்களின் அடிப்படை யில் விண்ணப் பிக்க வேண்டும்.
ரூ.20க்கான முத்திரைத் தாளில் தொழில் உரிமத்திற் கான திட்டங் களைப் பின் பற்றுவேன் என்பதற் கான உறுதி மொழி பத்திரம் கொடுக்க வேண்டும்.

இதனடிப் படையில் தொழில் உரிமம் கிடைக்கும். இந்த உரிமத்தை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்து க்குள் உரிமம் புதுப்பிக்கப் படவில்லை யென்றால் புது உரிமம் எடுக்க வேண்டும்.

ஏன் வாங்க வேண்டும்

இது போன்ற அனுமதிகளை நகராட்சிகள் மூலம் வாங்க வேண்டும் என்பதற்கு முக்கிய காரணம் மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் தொழிற் சாலைகள் அமைத்தால் அது இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் என்பதால் தான்.

என்ன தொழில் எந்த பகுதியில் தொடங்க உள்ளனர் என்பதை அறிந்து அதற்கேற்ப அனுமதி வழங்கப்படும். இதற்கு எழுத்து பூர்வமாக அத்தாட்சிகள் அடிப்படையில் விண்ணப்பிக்க வேண்டும்.
நடைமுறை என்ன?

தொழில் அமைய உள்ள கட்டடத்தின் அங்கீகரிக்கப் பட்ட திட்டம் அல்லது மண்டல செயற் பொறியாளரால் அங்கீகரிக்கப் பட்ட கட்டட சான்றிதழ், அந்த கட்டட உரிமை யாளரின் ஆட்சேபணை யில்லா சான்றிதழ்,

நடப்பு ஆண்டு வருமான வரியின் நகல், தொழில் வரியின் நகல், மாவட்ட தீயணைப்பு அதிகாரியின் ஆட்சேபனை யில்லா சான்றிதழ்,

தொழிற் சாலை ஆய்வாளர் களிடமிருந்து பெற்ற சான்றிதழ், அக்கம் பக்கம் உள்ளவர் களின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் என சட்டம் நடை முறை களை வைத்துள்ளது.
குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை புலாவ் செய்வது எப்படி?
தங்கும் விடுதிகள் மற்றும் உணவகம் என்றால் குடிநீர் வாய்ப்புகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இயந்திரங்களை பயன்படுத்தும் தொழிற்சாலைகள் என்றால் பணியிடம், கட்டிடம், அதற்கான இதர அனுமதிகள், எத்தனை பணி யாளர்கள் பணிபுரிய உள்ளனர் என்கிற விவரங்கள் கொடுக்க வேண்டும்.

தவிர குறிப்பிட்ட தொழிற்சாலை தொடங்கு வதற்கான திட்ட வரைபடம் போன்றவை இணைக்க வேண்டும். அந்த இடத்தின் காற்றோட்ட வசதி, தீ தடுப்பு வசதிகள், அறைகள், கட்டிட உயரம் போன்ற வையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
தொழிற்சாலை ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட வர்களின் குறிப்பின் பேரில் விண்ணப்பம் பரிசீலிக்கப் படும்.

இந்த நடை முறைகள் பின்பற்றப்படும் பட்சத்தில் பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப் படுகிறது. மேலும் சட்டத்துக்குட் பட்ட தொழில்கள் என்கிற அடையாளமும் கிடைக்கிறது.

இந்த தொழில் உரிமம் பெறாமலோ அல்லது புதுப்பிக்கப் படவில்லை என்றாலோ தொழிலை முடக்கி வைக்கவும் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடமுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings