கணவரின் இறுதிச் சடங்குக்காக வந்த சசிகலா, தஞ்சாவூரில் அவருக்குச் சொந்தமான இல்லத்தில் தங்கியி ருக்கிறார். அங்கு போலீஸார் பாதுகாப்பு க்கு நிறுத்தப்படவில்லை.
கட்சி நிர்வாகிகள் சிலர் வீட்டுக்கு வெளியே நிற்கின்றனர். சில மீடியா லைவ் வாகனத்தோடு காத்துக் கிடக்கின்றனர்.
சசிகலா தன் கணவர் நடராஜன் இறந்ததை யடுத்து அவரின் இறுதிச் சடங்குக்காகப் பெங்களூரு சிறையி லிருந்து 15 நாள்கள் பரோலில் வெளியே வந்து ள்ளார்.
அவர் தஞ்சாவூர் பரிசுத்தம் நகரில் உள்ள அவருக்குச் சொந்த மான இல்லத்தில் தங்கியி ருக்கிறார்.
நேற்று கணவர் நடராசன் உடல் அருகேயே நின்று கொண்டிருந் ததால் சோர்வாக இருந்தவர், காரியங்கள் முடிந்ததும் ஓய்வெடுப்ப தற்காக அறைக் குச் சென்று விட்டாராம்.
இன்று காலை 6 மணிக்கு மேல் வீட்டின் வெளிப் புறத்துக்கு வந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸாக நடந்தாராம்.
நடராசன் உடல் அருகே இருந்த சசிகலாவை பார்ப்பதற்கும் பெரும் கூட்டம் முண்டிய டித்ததால் அவ்வப் போது தள்ளு முள்ளும் ஏற்பட்டது. அதனால் வீட்டில் உள்ள செடிகள் மற்றும் தொட்டிகள் சேத மடைந்தது.
இந்த வீட்டை ரொம்ப நேசித்து கண் போல் கண்காணித் தார் கணவர். அவருக்கு செடிகள் என்றால் உயிர். அது இப்படி அலங்கோல மாகக் கிடக்கிறது.
உடனே சுத்தம் செய்யச் சொல்லி உறவினர் களுக்கு உத்தர விட்டாராம். சுத்தம் செய்யும் பணியில் பெண்கள், ஆண்கள் எனப் பலர் ஈடு பட்டிருந் தனர்.
வீட்டுக்கு உள்ளே சுத்தம் செய்யும் பணிக்குச் சென்ற பெண்களுக்கு உடன் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதிக்க வில்லை. பாதுகாப்பு க்குப் போலீஸார் நிறுத்தப்பட வில்லை.
அதனால் சசிகலா தரப்பினரே தனியார் செக்யூ ரிட்டிகள் சில பேரை நியமித் துள்ளனர். அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட் டுள்ளனர்.
வீட்டுக்கு உள்ளே சசிகலா தங்கி யிருக்கும் அறையில் டி.டி.வி.தினகரன் நீண்ட நேரமாக ஆலோசனை யில் ஈடுபட்டுள்ள தாகச் சொல்கி றார்கள்.
திவாகரன் மன்னார்குடியில் உள்ள புகழ்மிக்க ராஜகோபால சுவாமி கோயிலில் திருவிழா நடந்து கொண்டிருப்பதால் அதற்கு மண்டகப்படி கொடுப்பதற் காகச் சென்று விட்டாராம்.
அவர் மகன் ஜெயானந்த்தும் வெளியே சென்று விட்டாராம். உள்ளே சசிகலா ஆலோசனை யில் ஈடுபட்டிருந் ததால் நடராசன் அண்ணன் சாமிநாதன், தம்பி பழனியப்பன் நீண்ட நேரமாக வெளியே போர்டிக் கோவிலேயே அமர்ந்தி ருந்தனர்.
இளவரசி மகன் விவேக் ஜெயராமன் வீட்டுக்கு வெளியே உள்ள சாலையில் நின்று கொண்டு தன் ஆதரவாள ர்களுக்கும்
மற்றும் ஜெயா டிவி ஊழியர் களுக்கும் ஆலோசனை களை வழங்கிய படி இருந்தாராம். 15-க்கும் மேற்பட்ட கார்கள் வீட்டைச் சுற்றி நிற்கின்றன.
கட்சி நிர்வாகிகள் பலர் எப்படி யாவது சசிகலாவை பார்த்து சில வார்த்தைகள் பேசி விட வேண்டும் என காத்துக் கிடக்கின் றனர்.
ஜெயா டிவி உட்பட சில வடநாட்டு சேனல்களும் அதன் ஊழியர் களும் லைவ் வாகனத்தோடு வீட்டுக்கு முன் காத்துக் கிடக்கின்றனர். மொத்த த்தில் பரபரப் புடனே காட்சி யளிக்கிறது சசிகலா தங்கி யிருக்கும் அந்த 11-ம் நம்பர் இல்லம்.
Thanks for Your Comments