தமிழக விவசாயிகளின் கோரிக்கையும், மகாராஷ்டிரா மாநில விவசாயிகளின் கோரிக்கையும் ஒரே மாதிரியாக இருந்தும் அவர்கள் மட்டும் அமைதிப் பேரணி மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.
ஏன் நமது தமிழக விவசாயிகளுக்கு மட்டும் தோல்வி என்ற ஆதங்கம் தற்போது பகிரங்கமாக எழுந்துள்ளது.
தமிழக விவசாயிகள் 40 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் தங்கியிருந்து தங்களது கஷ்டங்களை, கோரிக்கைகளை பல்வேறு வழிகளில் எடுத்து வைத்தனர்.
ஆனால், இவர்களது கோரிக்கைகளை செவி கொடுத்து கூடக் கேட்க ஆள் இல்லை. பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட இவர்கள் விரட்டி அடிக்கப் பட்டனர்.
பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் மறுக்கப் பட்டது. டெல்லியில் ஆடை இல்லாமல் விரட்டி அடிக்கப் பட்டனர்.
ஆனால், 5 நாட்கள் நடை பயணமாக நாசிக்கில் இருந்து மும்பை வந்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பத்னவிசை சந்தித்து அந்த மாநில விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளிக்கப் பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது இடங்களுக்கு ரயிலில் அனுப்பி வைக்கப் பட்டனர்.
மகாராஷ்டிரா விவசாயிகள் தமிழக விவசாயி களின் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு எவ்வாறு சென்றால் அரசை பணிய வைக்க முடியும் என்று ஆலோசித்து பணிய வைத்தனர்.
அவர்களுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து ஆதரவு கிடைத்தது. 180 கி.மீட்டர் நடந்தனர். வழி நெடுகிலும் மரியாதை. 5 நாட்கள் நடந்து வந்து மும்பையில் கூடினர். முழுக்க அமைதியாக அகிம்சை வழியில் பேரணி நடந்தது.
இவர்களது பேரணிக்கு துணை நின்றது இடதுசாரி முன்னணி. மகாராஷ்டிரா வில் இடது சாரிகளின் பலம் மிகவும் குறைவு.
அப்படி இருந்தும் இந்தப் பேரணி பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மாநில மற்றும் மத்திய அரசுகளை அசைத்துக் காட்டி யுள்ளது. இந்தப் பேரணி நாளை தேசிய அளவில் திரண்டாலும் ஆச்சரியப் படுவதற் கில்லை.
நாடு அடுத்த ஆண்டு நாடாளு மன்றத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், மீண்டும் விவசாயிகள் திரளுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
மகாராஷ்டிரா விவசாயிகள் மேற்கொண்ட பேரணிக்கு பெரிய அளவில் மீடியாக்களின் கவனம் கிடைத்தது. பேரணியில் கலந்து கொண்ட வர்களும் 30,000 த்துக்கும் மேல்.
ஆனால், தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் சொற்ப அளவே. இந்தக் குரலுக்கு வலு சேர்க்க முடியவில்லை.
சில கட்சிகள் தூண்டுதலால் இது நடக்கிறது என்று அரசியல் சாயம் பூசப் பட்டது. விவசாய அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லை. விவசாய அமைப்புகள் துண்டாடப் பட்டனர்.
தமிழக பாஜக தரப்பில் இருந்து ஆதரவு இல்லை. தமிழக விவசாயி களை மத்திய அரசு கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. ஆனால், மகாராஷ்டிரா வில் அதுபோல் எடுத்துக் கொள்ள முடிய வில்லை.
அங்கு கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா ஆகிய கட்சிகள் விவசாயி களுக்கு ஆதரவு கொடுத்தன. மாநில அரசைக் கண்டித்தன.
தமிழகத்திலோ, ஆளும் கட்சி பலத்துடன் இருந்தாலும், மத்திய அரசை எதிர்த்து குரல் கோடுக்குள் நிலையில் இல்லை.
கணக்கில் காட்டுவதற்கு என்று மட்டுமே குரல் கொடுக்க முடிந்ததே தவிர, ஆளும் அதிமுக வால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதே நிலைமையில் தான் எதிர்க் கட்சிகளும் இருந்தன.
தற்போது காவிரி மேலாண்மை விஷயத்திலும் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப் பட்டு வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்கியும், மத்திய அரசு கும்பகர்ண தூக்கத்தில் உள்ளது.
இதற்குக் காரணம், கர்காடகா மாநிலத் தேர்தல். ஆதலால், பாஜக பட்டும் படாமல் இந்த விஷய த்தை தள்ளிப் போடுவதில் கவனம் செலுத்தி வருகிறது.
தேவை யில்லாமல் நான்கு மாநிலங் களையும் அழைத்து ஆலோசித்து முடிவு கூறுங்கள் என்று மத்திய அரசு கூறுகிறது.
உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய பின்னர் என்ன ஆலோசனை மத்திய அரசுக்கு மாநில அரசுகளிடம் இருந்து தேவைப் படுகிறது.
இது காலம் கடத்தும் வித்தை என்று தான் தோன்று கிறது. இனி தமிழக விவசாயிகள் செய்ய வேண்டியது, தமிழகத்தில் இருந்து தங்களது பேரணியை துவக்கி தமிழகத்தில் முடிக்க வேண்டும்.
சர்வதேச கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்ட த்தை நடத்திக் காட்டிய தமிழகத் திற்கு விவசாயிகள் போராட்ட த்தையும் நடத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும்.
தோள் கொடுக்க வழி நெடுகிலும் தமிழர்கள் தயாராக இருக் கிறார்கள். தமிழக விவசாயி களின் பொது நலனுக்கு ஒருமித்த குரல் தற்போது தேவைப் படுகிறது.
Thanks for Your Comments