குமரி மாவட்டத் தில் 18 கிராமங் களில் 2-வது நாளாக இன்று கடல் சீற்றத்துடன் காணப் படுகிறது.
10 அடி உயரத்திற்கு மேல் கடல் அலை வீசி வருவதுடன், 150-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் விடிய விடிய மீனவ மக்கள் அச்சத்துடன் காணப்படு கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், தேங்காய் பட்டினம், நீரோடி, மார்த் தாண்டம் போன்ற பகுதிகளில் நேற்று முதல் கடல் சீற்றத்துடன் காணப் படுகிறது.
கடலலை வேகம் காரணமாக நேற்று நவஜீவன் காலணி பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதனால் வீட்டி லிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
அதே போல, வள்ள விளை கரையோர பகுதியில் சில வீடுகளில் கடல் அலைகள் வீட்டுக் குள்ளும் புகுந்து விட்டதால் மீனவ மக்கள் பெரும் சிரமத்திற் குள்ளாயினர்.
இதனால் அவர்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க அரசு சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன
மேலும் கொட்டில் பாடு, ராஜக்க மங்கலம் போன்ற பகுதிகளில் கடலலை 10 அடி முதல் 15 அடி உயரத்திற்கு மேல் காணப் பட்டது.
கொல்லங்கோடு அருகே வள்ள விளையில் கடல் சீற்றம் காரண மாக 3 வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், தற்போது வரை அங்கு அலையின் வேகம் குறையால் அப்பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படு கிறது.
மாவட்ட த்தின் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடிய வில்லை என வேதனை தெரிவித் துள்ளனர்.
இந்நிலை யில் தேங்காய் பட்டினம், இரயுமன் துறையில் நிறுத்தி வைக்கப் பட்டு இருந்த 5 படகுகளை கடலலை இழுத்து சென்று விட்டதால் அது மீனவர் களுக்கு கூடுதல் கவலையை அளித்துள்ளது.
Tags: