சவுதியாவில் ஏப்ரல் 18 முதல் தியேட்டர் திறக்கப்படும் - சவுதி அரசு | Saudi Arabia will open the theater from April 18th - Saudi Government !

0
முக்கியமான அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியா வில் பல்வேறு கட்டுப் பாடுகள் அமலில் இருக்கின்றன. 


இதில் பொது வெளியில் சினிமாவுக்கு விதிக்கப் பட்டுள்ள தடை முக்கிய மானது. 

மத கட்டுப் பாடுகள் மீறப்படுவ தாக கூறி கடந்த 1980-களின் தொடக்க த்தில் சினிமாவு க்கு சவுதி அரசு தடை விதித்தது.

ஆனால் தற்போது சவுதியின் பட்டத்து இளவரசராக இருக்கும் முகமது பின் சல்மான், நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார். 

குறிப்பாக குடி மக்களுக்கு விதிக்கப் பட்டு இருந்த பல்வேறு தடைகளை அவர் விலக்கி வருகிறார். 

இதில் முக்கியமாக, பெண்கள் வாகனம் ஓட்டு வதற்கு விதிக்கப் பட்டு இருந்த தடை விலக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதைத் தொடர்ந்து சுமார் 40 ஆண்டு களுக்குப் பின்னர் முதல் முறையாக அந்த நாட்டில் சினிமாவு க்கும் அனுமதி வழங்க சவுதி அரசு முடிவு செய்தள்ளது.

இந்நிலையில், சவுதி அரேபியா நாட்டில் 40 ஆண்டு களுக்கு பிறகு ஏப்ரல் 18-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்படத் தொடங்கும் என அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசின் ஊடகங்கள் கூறுகை யில், சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஏப்ரல் 18-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் செயல்பட தொடங்கும். 

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஐந்து ஆண்டு களில் சவுதியில் உள்ள 15 நகரங் களில் 30 முதல் 40 தியேட்டர்கள் வரை திறக்கப்படும்.

சினிமா மீதான தடை விலக்கப் படுவதால் பொழுது போக்குத் துறை வளர்ச்சி காணும் என சவுதி அரசு தெரிவித்து உள்ளது. 

இது நாட்டின் பொருளா தாரத்தில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்து வதுடன், பலருக்கு நிரந்தர வேலை வாய்ப்பையும் உருவாக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings