ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பிரான்ஸ் நாட்டு புகைப்பட நிபுணர் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். 45 பேர் காய மடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே சஸ்தராக் என்ற இடத்தின் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.
இதனையடுத்து சம்பவ இடத்தில் காயமடைந் தவர்களுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் முதலுதவி அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு அனுப்ப முயன்றனர்.
அப்போது அதே இடத்தில் மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், சம்பவத்தை புகைப் படத்தை எடுத்த பிரான்ஸ் நாட்டு ஊடகமான AFP-யின்
புகைப்பட நிபுணர் உட்பட 25 பேர் பலியாயினர், 45 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங் களுமே தற்கொலைப் படைத் தாக்குதல் என ஆப்கன் ராணுவத்தினர் தெரிவித் துள்ளனர்.