மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டும் முதல் பரிசு: ₹2.05 கோடி !

கேரளாவில் ஒரே நபருக்கு அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் 3 முறை லாட்டரியில் முதல் பரிசாக மொத்தம் ₹2.05 கோடி கிடைத்துள்ளது. 
மின்வாரிய ஊழியருக்கு 3 ஆண்டும் முதல் பரிசு: ₹2.05 கோடி !
கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலபுழா பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (62). இவர் கேரள மின் வாரியத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். 

லாட்டரி டிக்கெட் வாங்குவது இவருடைய வழக்கம். கடந்த 2016ம் ஆண்டு இவர் வாங்கிய கேரள அரசின் பவுர்ணமி லாட்டரி யில் முதல் பரிசு ₹65 லட்சம் கிடைத்தது.

அடுத்த வருடம் 2017 நவம்பர் மாதம் கேரள அரசின் நிர்மல் லாட்டரி யில் மீண்டும் இவருக்கு முதல் பரிசு ₹70 லட்சம் கிடைத்தது. 

லாட்டரி யில் பரிசு விழுந்து கோடீஸ்வரன் ஆன பிறகும் லாட்டரி வாங்கு வதை இவர் நிறுத்த வில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இவர், கேரள அரசின் நிர்மல் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். 

இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல் பரிசு ₹70 லட்சமும் மனோகரனு க்கு கிடைத்தது. அடுத்தடுத்த வருடங் களில் 3 முறை 
லாட்டரியில் ஒரே நபருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது அனைவரு க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி யுள்ளது. மனோகரனுக்கு வனஜா என்ற மனைவியும். சஜித் என்ற மகனும், லெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.
Tags:
Privacy and cookie settings