சென்னை தனியார் பள்ளியிலிருந்து, புனேவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற மாணவர்களில் 3 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டை ECI மெட்ரிகுலேசன் பள்ளி யில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 20 பேரை பள்ளி நிர்வாகம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றது.
விவசாயம் சம்பந்தப் பட்ட பயிற்சிக் காக சென்ற மாணவர் களில் 5 பேர் அருகிலுள்ள மூல்சி ஏரியில் குளிக்கச் சென்றனர்.இதில் ஏரியில் மூழ்கி, தண்டையார் பேட்டையைச் சேர்ந்த மாணவர் சந்தேஷ்குமார்,
இந்திரா காந்தி நகரைச் சேர்ந்த தானிஷ் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
இரண்டு பேரின் உடல்கள் மீட்கப் பட்ட நிலையில், சவரண குமாரின் உடலை மீட்புக் குழுவினர் தேடி வரு கின்றனர்.