திருச்சி மாவட்டம் தா.பேட்டை நெசவாளர் காலனியை சேர்ந்தவர் கணேசன் (70). நெசவு தொழில் செய்து வந்தார்.
இவரது மகன் சரவணன் (37). சீட்டு கம்பெனி நடத்தி பலரிடம் லட்சக் கணக்கில் பணம் வசூலித்து கடந்த மாதம் 3 கோடி பணத்துடன் சரவணன் தலைம றைவாகி விட்டார்.
இதனால் பணத்தை இழந்த வர்கள், திருச்சி பொருளாதார குற்றப் பிரிவில் புகார் கொடுத்தனர். இந்தநிலை யில், சரவணனின் தந்தை கணேசன் நேற்று முன்தினம் இரவு வயது முதிர்வு காரண மாக இறந்து விட்டார்.
பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள், இதைக் கேள்விப் பட்டனர். எப்படியும், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சரவணன் வருவார். வந்ததும்
அவரை பிடித்து விட வேண்டும் என்று அனைவரும் கணேசன் வீட்டை முற்றுகை யிட்டனர். இது குறித்து எப்படியோ கேள்விப் பட்ட சரவணன், தந்தை யின் இறுதிச் சடங்கை செய்ய வர வில்லை.
இதனால் இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் முன் வந்தனர். சரவணன் வரும் வரை இறுதி சடங்கை வேறு யாரும் செய்யக் கூடாது என்று பணம் கொடுத்த வர்கள் தடுத்து விட்டனர்.
இதை யடுத்து உறவினர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்று விட்டனர். இதனால் நெசவாளி கணேசன் உடல் வீட்டில் கேட்பாரற்று கிடக்கிறது. கணேசனின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டது குறிப்பிடத் தக்கது.
ஆனால் பணம் கொடுத்த வர்கள் மட்டும் கணேசனின் வீட்டு வாசலில் அவரது மகன் சரவணன் எப்படியும் வருவார், அவரிடம் பணத்திற்கு என்ன வழி என்று கேட்க வேண்டும் என விடிய விடிய காத்தி ருந்தனர்.
இந்நிலை யில் நேற்று இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் கருணாநிதி உத்தரவின் பேரில் விஏஓ வள்ளி நாயகம் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதை யடுத்து உறவி னர்கள் ஒன்று சேர்ந்து கணேசன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து மதியம் 12.30க்கு அடக்கம் செய்தனர்.