35 ஆண்டு களுக்கு பிறகு சவுதி அரேபியா வில் சமீபத்தில் சினிமா தியேட்டர் கள் திறக்கப் பட்டுள்ளன.
அமெரிக்கன் மூவி தியேட்டர் ஸுடன் (AMC) கைகோத்து, மேலும் 15 நகரங் களில் ஐந்து ஆண்டு களுக்குள் 40 தியேட்டர்கள் தொடங்கி விருப்பதாக வும் அறிவித்தனர்.
இதனால், மிகுந்த எதிர் பார்ப்புடனும் மகிழ்ச்சி யுடனும் இருக்கி றார்கள் அந்நாட்டு மக்கள்.
சவுதி தியேட்டர்
1970 வரை சவுதி அரேபியாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால், நாளடைவில் இது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என்று,
இஸ்லாமிய மறுமலர்ச்சி திட்டம் 1980-களில் தியேட்டர் களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதனால், ஒரேயொரு தியேட்டரைத் தவிர்த்து மற்ற அனைத்து தியேட்டர் களும் மூடப்பட்டன.
இயங்கும் தியேட்டரிலும் கல்வி சம்பந்தப் பட்ட திரைப் படங்கள் மட்டுமே வெளியிடு வதுக்கு அனுமதி.
சிம்பொனி கச்சேரி மண்டபம்
இதனைத் தொடர்ந்து, பல பரிசீலனை களுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சட்ட பூர்வமாக சினிமா தியேட்டர்கள் இயங்கும் என அறிவிக்கப் பட்டது.
சிறப்புக் காட்சியும் அரங்கேறியது. இந்த காட்சிக்கு மூத்த அரசு அதிகாரிகள், சில வெளிநாட்டு பிரமுகர்கள்,
தேர்ந்தெடுக்கப் பட்ட தொழில் முனை வோர்கள் மட்டுமே அழைக்கப் பட்டனர்.
35 ஆண்டு களுக்குப் பிறகு சவுதியில் ஒளிபரப்பான முதல் திரைப்படம் 'Black Panther'. ரியாத் நகரிலுள்ள
'சிம்பொனி கச்சேரி மண்டபத்தை' தியேட்டராக மாற்றி யமைத்து, 45 அடி உயர ஸ்க்ரீனில் இப்படம் ஒளிபரப்பப் பட்டது.
பொது மக்களுக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியது. இது 450 சீட்டுகளைக் கொண்ட தியேட்டர்.
இதைப் பற்றி AMC நிறுவன த்தின் தலைமை நிர்வாகி ஆடெம் ஆரோன் தொடக்க விழாவில் கூறிய தாவது,
"இந்த நாள் AMC வரலாற்றில் மிக முக்கிய மான நாள். இனி சவுதி அரேபிய மக்கள் படங்கள் பார்ப்பதற்கு பஹ்ரைன், துபாய், லண்டன் போன்ற நகரங்களு க்குச் செல்ல தேவை யில்லை.
இங்கேயே அமைந்துள்ள அழகான தியேட்டர் களுக்குச் சென்று படங்களைப் பார்த்து மகிழலாம்' என்று கூறினார்.
இத்தனை ஆண்டு களுக்குப் பிறகு தியேட்டர் களைத் திறப்பதற்கு மிக முக்கியக் காரணமும் உண்டு.
இது, சமூக சீர்திருத்த வாதியான 'இளவரசர்' முஹம்மது பின் சல்மானின் 'சமூகம் நவீன மயமாக்கல் திட்டத்தின்' ஓர் அங்கமும் கூட.
இன்னும் சில காலங்களில் எண்ணெய் விலை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால்,
அந்நேரத்தில் இது போன்ற பொழுது போக்கு அம்சங்களின் வாயிலாக ஈட்டப்படும் லாபம்,
தக்க சமயத்தில் உதவும் என்ற நோக்கிலும் தியேட்டர் கள் திறக்கப் பட்டுள்ளன.
சமூக வலைதள பதிவு
இவர்களின் நீண்ட கால இலக்கு, சுமார் 32 மில்லியன் மக்கள் வாழும் நாட்டுக்கு,
மொத்தம் 2,500 ஸ்க்ரீன்ஸ் வீதம் 350 தியேட்டர்கள் 2030-க்குள் திறக்கப்பட வேண்டும் என்பதே.
அதிலும் இங்கு 25 வயதுடைய வர்களின் எண்ணிக்கையே அதிகம். நிச்சயம் நலிவடை யாத திட்டம் என எதிர் பார்க்கப்படு கிறது.
இதனால் பெரும் பாலான மக்கள் மகிழ்ச்சியில் உறைந் திருந்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
சில சமூக வலைதள பதிவுகள் ஆச்சர்யப்பட வைக்கிறது. அதில், 'நினைவில் இருக்கட்டும்.
நீ கடவுள் முன் நின்று, படம் பார்த்தவர்கள் அனைவரின் பாவங் களையும் வாங்கி கொள்வாய்' என்றெல்லாம் பதிவிட்டி ருந்தார்கள்.
இதைப் பற்றி அந்நாட்டு தகவல் தொடர்பாளர் அவாத் அல் அவாத் கூறுகையில்,
"தியேட்டர் களுக்கு வந்து படம் பார்த்து மகிழ வேண்டும் என நினைப் பவர்களை நாங்கள் மனதார வரவேற் கிறோம்.
வர விருப்ப மில்லாதவர் களை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம்’’ என்றார்.
அந்நாட்டு சின்னத் திரைகளின் சென்சார் விதிமுறைகள் தான் வெள்ளித் திரைக்கும். மதம், அரசியல், கவர்ச்சி தொடர்பான படங்கள் முற்றிலும் தவிர்க்கப் படும்.
ஒரு மாசம் ஸ்ட்ரைக் நடந்ததுக்கே, எப்படா தியேட்டர் போவோம்னு ஆயிடுச்சு. ஆனா, இவங்க எப்படித் தான் 35 வருஷம் இருந்தாங் களோ!