நிர்மலா தேவி விவகாரத்தில் அவருக்கு நெருக்கமாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும்
ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் 5 நாள்கள் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்குப் பின் இன்று சிறையில் அடைக்கப் பட்டார்கள்.
அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப் படுத்திய வழக்கில் அக்கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி முதலில் கைது செய்யப் பட்டார்.
அவர் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படை யில் நீண்ட தேடலுக்குப் பின் உதவிப் பேராசிரியர் முருகனும் நீதி மன்றத்தில் சரணடைந்து கருப்ப சாமியும் சி.பி.சி.ஐ.டி- யின் விசாரணை க்கு வந்தார்கள்.
கடந்த 5 நாள்களாக முருகனையும் கருப்ப சாமியையும் விருது நகர் சி.பி.சி.ஐ.டி. அலுவல கத்தில் வைத்து விசாரித்து வந்தனர். மேலும், அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
கருப்பசாமியின் செல்போனை அவரது நண்பரிட மிருந்து சி.பி.சி.ஐ.டி போலீஸார், கடந்த 29-ம் தேதி கைப்பற்றினர்.
இவர்களை விசாரணை செய்ததன் மூலம் இந்த வழக்கு அடுத்த கட்டத்து க்கு செல்லுமா என்று தெரிய வில்லை.
புத்தாக்க பயிற்சி மைய இயக்குநர் கலைச் செல்வனுக்கு தான் அனைத்தும் தெரியும் என்று இவர்கள் தரப்பு கூறி வருகிறது.
சி.பி.சி.ஐ.டி-யும் எந்த தகவலையும் வெளியிடாமல் உள்ளனர். அவர்களிடம் விசாரணைக்குழு அதிகாரி சந்தானமும் விரைவில் விசாரணை செய்ய உள்ளார்.
இந்த நிலையில் இன்று இவர்கள் சாத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டனர். சி.பி.சி.ஐ.டி காவல் முடிந்த நிலையில், அவர்களை 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தர விட்டார்.
இதை யடுத்து, அவர்கள் மதுரை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர். ஏற்கெனவே மதுரை பெண்கள் சிறையில் நிர்மலா தேவி இருக்கிறார்.
இந்த வழக்கில் அடுத்து என்னவென்பது சி.பி.சி.ஐ.டி எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் தெரியும்.