என்னைப் பொறுத்த வரைக்கும் மற்ற துறைகளை விட பொண்ணுங் களுக்கு மாடலிங் பாதுகாப்பான துறைதான் என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மாடல் துர்கா.
மாடலிங் கிற்கு மட்டுமல்ல இவரது டப்ஸ்மாஷூ க்கும் சமூக வலை தளத்தில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இன்ஸ்டா கிராமில் இவர் பதிவிடும் புகைப் படங்களு க்கும், டப்ஸ்மாஷ் வீடியோக் களுக்கும் பல ஆயிரம் லைக்ஸ் குவிகிறதாம். அவரோடு ஒரு சாட்..!
துர்கா பற்றி சொல்லுங்க..?
`என்னுடைய சொந்த ஊர் கோயம்புத்தூர். இப்போ எனக்கு இருபது வயசாகுது. என் அம்மாவும், அப்பாவும் பேராசிரியரா வேலை பார்க்குறாங்க.
உண்மையைச் சொல்ல ணும்னா நான் எங்க அம்மா, அப்பாவுக்கு வளர்ப்பு குழந்தை. என்னைத் தத்தெடுத் திருந்தாலும், என் சொந்த அம்மா, அப்பாவை விட நல்லா பார்த்துக் குறாங்க.''
மாடலிங் பயணம் எப்போது ஆரம்பித்தது..?
`எனக்குச் சின்ன வயசுல இருந்தே மீடியா ஃபீல்டு மேல ஒரு கிரேஸ் இருந்துச்சு. என் ஃபேமிலில என் அம்மாவும்,
அப்பாவும் என்னைப் பாசமா பார்த்துக் கிட்டாலும் எங்க சொந்தக் காரங்க என்னைக் கொஞ்சம் வெறுப்போட தான் அணுகுனாங்க. பல நாள்கள் தனிமை யில் நிறையவே ஃபீல் பண்ணி யிருக்கேன்.
அவங்க ளுடைய பிரஷர்னால பிளஸ் டூ முடிச்சதும் எனக்குத் திருமணம் செஞ்சுடலாம்னு அப்பா முடிவு பண்ணாங்க.
ஆனா, எனக்கு நான் யாருன்னு நிரூபிக் கணும்னு விருப்பம் அதுனால அம்மாவோட சப்போர்ட்டோட மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன்.
அதுக்கப் புறம் என் அப்பாவும் என் விருப்பத் துக்கு முழுமனசோட இல்ல னாலும் எனக்குப் பிடிச்சிருக் குன்னு சப்போர்ட் பண்ண ஆரம்பிச் சிட்டார். இப்படித் தான் என் மாடலிங் பயணம் ஆரம்பிச்சது.''
இடையில் மாடலிங்கிற்கு பிரேக் விட்டுருந்தீங்களே..?
`எனக்குக் கொஞ்சம் ஹெல்த் பிரச்னை ஏற்பட்டுச்சு. அதுனால டாக்டர் முழுசா ரெஸ்ட் எடுத்தே ஆகணும்னு சொல்லிட்டார்.
அதுக்காகத் தான் கொஞ்சம் பிரேக் எடுத்தேன். இப்போ ஹெல்த் பிரச்னைகள் எல்லாம் சரி ஆகிடுச்சு. இன்னும் ரெண்டு மாசத்துல மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்து டுவேன்.''
டப்ஸ்மாஷ்ல பயங்கர பிரபலம் ஆகிட்டீங்களே..?
வீட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தப்போ தான் பொழுது போக்குக்காக டப்ஸ்மாஷ் பண்ணேன்.
அதைப் பார்த்துட்டு என் ஃப்ரெண்ட் ஸெல்லாம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அதுக்கப் புறமா தான் நிறைய டப்ஸ்மாஷ் பண்ண ஆரம்பிச்சேன்.
நிறையப் பேர் எனக்கு இன்பாக்ஸ் பண்ணி உங்க கூட டப்ஸ்மாஷ் பண்ணனும்னு விரும்பு றேன்னு சொல்லு வாங்க.
இப்போ ரீசன்ட்டா பிரியா வாரியர் - ரோஷன் பிரபலமான சீன்ல பிரியா வாரியர் க்குப் பதிலாக நான் ரோஷன் கூட சேர்ந்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணிருக்கேன்.''
மறக்க முடியாத டப்ஸ்மாஷ்..?
நான் 'வாமனன் படத்துல ஊர்வசி மேடம் நடிச்ச காமெடி சீனை வைத்து ஒரு டப்ஸ்மாஷ் பண்ணேன்.
அதை என் ட்விட்டர்ல அப்லோடு பண்ணியிருந்தேன். அதைச் சந்தானம் சார் ரீ-ட்விட் பண்ணி யிருந்தாங்க. அந்த டப்ஸ்மாஷ் தான் என் ஃபேவரைட். ''
பட வாய்ப்புகள் வந்துச்சா..?
நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, பெரும் பாலும் இயக்கு நர்கள் நடிக்கி றதுக்குத் தேவையான திறமை அந்தப் பொண்ணு கிட்ட இருக்கான்னு பார்க்க மாட்டேங் குறாங்க.
உடம்பு நல்லா இருக்கான்னு தான் பார்க்கு றாங்க. நிறைய பேர் என்கிட்ட அட்ஜஸ்ட்மென்ட் பண்ண முடியு மான்னு கேட்டாங்க.
முடியா துன்னு சொன்ன தாலேயே நிறைய வாய்ப்புகள் தவற விட்டேன். மாடலிங்ல கூட இந்த மாதிரி பிரச்னைகளை நான் சந்திக்கல.
சினிமாவில் நடிக்க ணும்னு ஆசை இருக்கு. என் திறமையை மட்டும் பார்த்து எனக்கு ஏதாவது வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்.
நிறைய சீரியல் வாய்ப்பு வந்துச்சு. அப்போ என்னுடடைய ஹெல்த் பிரச்னை யால சீரியலில் நடிக்க முடியல. இப்போ சினிமா மட்டுமில்ல சீரியலில் நடிக்கவும் ரெடியா இருக்கேன்.''
இப்போ நீங்க மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ண சீரியல்..?
ஜீ தமிழில் இப்போ ஒளிபரப் பாக இருக்கிற `ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி' சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்துச்சு. எனக்கு அந்த ஸ்கிரிப்ட் ரொம்ப பிடிச்சிரு ந்துச்சு.
என் போட்டோ பார்த்துட்டு என்னைக் கூப்டாங்க. நேர்ல என்னைப் பார்த்ததும் என்னங்க இவ்வளவு ஒல்லியா இருக்கீங்க.
எங்களு க்குக் குண்டான பொண்ணு தான் தேவைன்னு சொல் லிட்டாங்க. நேத்து தான் அந்தத் தொடருடைய புரொமோ பார்த்தேன். மிஸ் பண்ணிட் டேன்னு வருத்தமா இருந்துச்சு.
`என்னை வளர்க்குற என் அம்மா, அப்பாவு க்குப் பெருமை சேர்க்கிற மாதிரி நடந்து க்கணும். மீடியாவுக் குள்ள என் திறமையி னால நுழைய முயற்சி பண்ணுவேன்.
வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், வேற ஏதாவது ஒரு வேலை தேடி, அதுல எப்படி என்னை சாதிக்க லாம்னு யோசிப்பேன்.
Thanks for Your Comments