நீலகிரி மாவட்டம் உதகையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 600 கிலோ மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அழித்தனர்.
உதகை முனிசிபல் மார்க்கெட்டில் உள்ள பழக்கடை களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அலுவலர்கள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மொத்த வியாபார பழக்கடையில் தடை செய்யப்ப ட்ட எத்தலின் ரிப்னர் வைத்து
செயற்கை முறையில் பழுக்க வைக்கப் பட்ட 600 கிலோ மாம்பழத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப் பட்ட மாம்பழத்தை வாகனத்தில் ஏற்ற பணியாளர்கள் வராததால், உணவுப் பாதுகாப்பு அலுவலர்களே வாகனத்தில் ஏற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்.
இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலர் கருணாநிதி கூறுகையில்,
முனிசிபல் மார்க்கெட் பழக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, மாம்பழப் பெட்டிகளில்
தடை செய்யப் பட்ட ‘எத்தலின் ரிப்னர்’ வைத்து செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப் பட்டிருப்பது தெரிய வந்தது.
பரிந்துரை செய்யப் பட்ட முறையில் மாம்பழங்களைப் பழுக்க வைக்காமல், ஒவ்வொரு மாம்பழப் பெட்டியிலும் பழங்களுக்கு இடையில் எத்தலின் ரிப்னர் வைத்து பழுக்க வைத்துள்ளனர்.
இவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம் பழங்களை உட்கொண் டால், அல்சர், கேஸ்ட்ரிக், கேன்சர், வாந்தி, பேதி உட்பட பல உடல் உபாதைகள் வரும்.
இதைத் தடுக்க ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ந்து உணவகங்கள், பழக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் என்றார்.