சென்னை அடையாறு வங்கி கொள்ளையில் ஈடுபட்ட பீகார் இளைஞர், அந்த வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்ட பின்னணியில் பல்வேறு திடீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள இந்தியன் வங்கி கிளையில், ஹெல்மட் அணிந்த மர்மநபர் ஒருவர் வங்கி மேலாளரிடம்
துப்பாக்கியை காட்டி மிரட்டி 6 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை யடிக்கப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத் தியது.
இதனை அடுத்து, அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்ற கொள்ளையனை, போக்கு வரத்து காவலர்கள்,
வங்கி ஊழியர் மோகன்ராஜ் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர், மடக்கி பிடித்து 6 லட்சத்து 35 ஆயிரம் பணம் மற்றும் 2 துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.
துரிதமாக செயல்பட்ட போக்கு வரத்து காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரை காவல் ஆணையர் பாராட்டினார்.
அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்ட கொள்ளையனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீகார் மாநிலம் சங்கர்பூர் கிராமத்தைச் சேர்ந்த மனீஷ் குமார் என்பதும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேலைத்தேடி சென்னை வந்ததும் தெரிய வந்தது.
கேளம் பாக்கத்தில் தங்கி கார் ஓட்டுனராக பணி யாற்றிய போது, இவருடைய நடவடிக்கை பிடிக்காமல் வேலையில் இருந்து நீக்கியுள்ளனர்.
பின்னர் மந்தை வெளியை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் மெரினா கடற்கரை யில் ஐஸ் க்ரீம் விற்பனை செய்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு 2 கைத்துப் பாக்கிகளை வாங்கி வந்து தான் தங்கியி ருக்கும் குடோனில் மறைத்து வைத்த மனீஷ் குமார், பாதுகாப்பு குறைவான வங்கியில் கொள்ளையிட முடிவெடுத்து வங்கிகளை நோட்ட மிட்டுள்ளார்.
துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இல்லாத அடையாறு இந்தியன் வங்கி கிளையை தேர்வு செய்த பின்பே இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப் பட்டுள்ளது.
இந்நிலை யில், சைதாப் பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட மனீஷ் குமாரை மே 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஆப்ரகாம் லிங்கன் உத்தர விட்டுள்ளார்.
கொள்ளை சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர் புள்ளதா? மனீஷ் குமார் மீது பீகாரில் குற்ற வழக்குகள் ஏதேனும் நிலுவை யில் உள்ளதா என்பது குறித்து அறிய, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வும் காவல் துறையினர் திட்ட மிட்டுள்ளனர்.
இதனிடையே மனீஷ் குமார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பீகார் மாநிலம் மூங்கர் மாவட்ட எஸ்.பி ஆசித் பார்த்தி தமிழக போலீசாரு க்கு தகவல் தெரிவித் துள்ளார்.
வட மாநிலங் களில் இருந்து வேலை தேடி தமிழகம் வருபவர் களின் எண்ணிக்கை அதிகரி த்துள்ள நிலையில்,
தமிழகத்தில் நிகழும் பல்வேறு குற்றச் சம்பவங்க ளில் வட மாநிலத்தைச் சேர்ந்த வர்களின் தொடர்பு அதிகரித் துள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குற்றப் பின்னணி உடையவ ர்களை தீவிரமாக கண்காணிப் பதன் மூலம் குற்றச் சம்பவங் களை தடுக்க முடியும் என்பதே நிதர்சன மான உண்மை.