பாலியல் வன்கொடுமையில் கைதான பா.ஜ.க பிரமுகர் கதறல் !

குழந்தைகளுக்கு எதிராக சமீப காலமாக நடந்து வரும் பாலியல் கொடுமைகள் நாட்டையே அதிர வைத்து வருகின்றன. 
பாலியல் வன்கொடுமையில் கைதான பா.ஜ.க பிரமுகர் கதறல் !
இந்த நிலை யில், ஓடும் ரயிலில் 9 வயது சிறுமி யிடம் பாலியல் வன் கொடுமை யில் ஈடுபட்டதாக வழக்கறிஞர் ஒருவரை ஈரோடு ரயில்வே போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர்.

சென்னை புரசை வாக்கத்தைச் சேர்ந்த தம்பதி தங்களுடைய குழந்தைகள், உறவினர்கள் என 10 பேருடன் திருவனந்த புரத்தில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு 

(ஏப்ரல் 21) சனிக்கிழமை மதியம் திருவனந்த புரம் - சென்னை மெயில் எக்ஸ்பிரஸில் ஏறியிருக் கின்றனர். 

ரயிலில் முன்பதிவு செய்திருந் ததால், தங்களுடைய பக்கத்தில் அமர்ந்த வர்கள், இரவு உணவை முடித்து விட்டு கண் அசந்திருக் கின்றனர். 

இரவு 12 மணியள வில் அந்தத் தம்பதி யின் 9 வயது மகள் கத்தி கூச்சல் போட, அனைவரும் பதறி யடித்து எழுந்திருக் கின்றனர். 
அதே பெட்டியில் பயணம் செய்த நபர் ஒருவர் அந்தச் சிறுமியிடம் பாலியல் வன் கொடுமையில் ஈடுபட்டதாக தெரியவர, அந்த நபரை பயணிகள் சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். 

அதை யடுத்து, ரயில்வே போலீஸா ருக்குத் தகவல் தெரிவித்து, ரயில் ஈரோடு ஸ்டேஷ னில் நின்றவுடன் அந்த நபரை போலீஸா ரிடம் ஒப்படைத் தனர்.

அந்தச் சிறுமியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படை யில் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய அந்த நபரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர். 
விசாரணையில் அந்த நபரின் பெயர் பிரேம் ஆனந்த் என்பதும் அவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞ ராக இருக்கிறார் என்பது போலீஸாரு க்குத் தெரிய வந்திருக் கிறது. 

மேலும், அவர் பா.ஜ.க தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருந்து வருவதும் விசாரணை யில் தெரிந்திருக் கிறது. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க. நான் பி.ஜே.பியில பொறுப்புல இருக்கேன். 

எனக்குன்னு பெரிய செல்வாக்கு இருக்கு. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா அசிங்கமாயிடும் என பிரேம் ஆனந்த் போலீஸாரிடம் கதறி யிருக்கிறார். 
இந்த பிரேம் ஆனந்த் 2006-ம் ஆண்டு ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டி ருக்கிறார்.

சில மாதங் களுக்கு முன்னதாக நகைச் சுவை நடிகர் சந்தானம் தாக்கிய தாக வழக்கறிஞர் ஒருவர் பேட்டி கொடுத்தாரே ஞாபகம் இருக்கிறதா, அந்த நபர் வேறு யாரும் இல்லை, போலீஸார் கைது செய்த இந்த பிரேம் ஆனந்தே தான்.
Tags:
Privacy and cookie settings