கோவையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில், மணமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடல் உறுப்பு தான விழிப்புணர்வு முகாம் நடத்தப் பட்டது.
கோவை ஈச்சனாரி பகுதியை சேர்ந்த இமயவன், அஞ்சுகம் மண மக்களுக்கு, கோவையில் ஒரு தனியார் மண்டப த்தில் நேற்று திருமணமும், வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.
திருமணத் திற்கு வரக்கூடிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு, ஒரு சமூக விழிப்பு ணர்வைக் ஏற்படுத்த வேண்டும் என்பது மணமக்களின் ஆசை.
இதனை அடுத்து, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு முகாமுக்கு ஏற்பாடு செய்தனர்.
இரண்டு மாதங் களுக்கு முன்பே திட்ட மிட்டு, திருமண அழைப்பி தழோடு, இந்த முகாம் குறித்த துண்டு பிரசுரமும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கப்பட்டது.
மண மக்கள், அவர்களது உறவி னர்கள், மற்றும் நண்பர்கள் என 200 க்கு மேற்பட்டோர், உறுப்பு தானம் செய்ய முன்வந்து, தங்களது விபரங்களை பதிவு செய்தது, மகிழ்ச்சி அளிப்ப தாக மண மக்கள் தெரிவித்தனர்.
மண மக்களின் இந்த முயற்சி பாராட்டு குரியது எனவும், உடல் உறுப்பு தானம் எந்த அளவிற்கு முக்கியம் என்பதை உணர்ந்து ள்ளதாக மண மக்களின் உறவி னர்கள் கூறினர்.
திருமண நிகழ்ச்சி களில் இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி னால், சமூக மாற்றத் திற்கு பேருதவி யாக இருக்கும் என்கின்றனர் முகாம் நடத்திய தொண்டு நிறுவன த்தினர்.
சமூக பொறுப்புடன் கூடிய ஒரு விழிப்புணர்வை, தங்களது திருமண த்தின் வாயிலாக ஏற்படுத் தியதன் மூலம், இந்த நாள் மறக்க முடியாத நாளாக அமைந்து விட்டதாக கூறு கின்றனர் இந்த முன்னுதாரண மணமக்கள்.