பாலத்தின் சுவரை உடைத்து விழுந்த பஸ் !

0
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து பவானி பாட்னா நோக்கி இன்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. 
பாலத்தின் சுவரை உடைத்து விழுந்த பஸ் !
இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். கலாகந்தி அருகே சென்ற போது முன்னால் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல டிரைவர் முயற்சித்தார். 

அப்போது பேருந்து நிலை தடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்து கொண்டு கீழே விழுந்தது. சுமார் 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த தால் பஸ்சின் முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. 

பயணிகள் ஒருவர்மீது ஒருவர் விழுந்ததால் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், பஸ் கண்டக்டர் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சுமார் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். அவர்களில் 6 பேரின் நிலை கவலைக் கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings