திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நகரி தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ. வும், நடிகையுமான ேராஜா நேற்று காலை தரிசனம் செய்தார்.
அவர் நிருபர் களிடம் கூறிய தாவது: திருமலை- திருப்பதி தேவஸ் தானத்தில் சர்ச்சையை கிளம்பும் வகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுப்பினர் களை நியமித் துள்ளார்.
இதில், பாஜ.வை சேர்ந்த மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் மனைவி க்கு பதவி வழங்கி யுள்ளார். ஆனால், தமிழகத் திற்கு ஒரு பதவி கூட வழங்காமல் ஏமாற்றி யுள்ளார்.
கடந்த 4 ஆண்டு களாக பாஜ.வுடன் இணைந்து அமைச்ச ரவையை பகிர்ந்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து குறித்து வாய் திறக்காமல் சந்திரபாபு நாயுடு மவுனம் காத்தி ருந்தார்.
தற்போது, மத்திய அமைச்சர் களை ராஜினாமா செய்ய வைத்து நாடகமாடி வருகிறார். மேலும், ஆந்திரா வுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, நான்கு பக்கமும் ஏ.சி. வைத்துக் கொண்டு 12 மணி நேரம் உண்ணா விரத நாடக மாடினார்.
உண்மை யிலேயே சந்திரபாபு நாயுடு விற்கு சிறப்பு அந்தஸ்து பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் தனது எம்.பி.க்களை ராஜினாமா செய்ய வைத்து டில்லியில் சென்று உண்ணா விரதம் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.