செங்கல்பட்டு அருகே அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது நிகழ்ந்த கல்வீச்சில், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் மண்டை உடைந்தது.
தனியார் நிறுவன ங்கள் நிறைந்த மகேந்திரா சிட்டி, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி அமைந் துள்ளது.
நேற்றிரவு அஞ்சூர் பகுதியில் இருந்த வந்த இருக்கர வாகனமும், சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் மோதிக் கொண்டதில்,
இருசக்கர வாகனத்தில் பயணித்த லாவண்யா என்ற பெண் சம்பவ இடத்தி லேயே பலியானார்.
விபத்து நிகழ்ந்த இடத்தில் குவிந்த பொது மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது.
காவல் துறையினர், மறியல் ஈடுபட்டவர் களை கலைக்க முற்பட்ட போது, தள்ளு முள்ளு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அபிமானி, மறியல் செய்தவர் களை கலைத்து, சடலத்தை வாகனத்தில் ஏற்ற முயன்றார்.
அப்போது சிலர் கல்வீச்சில் ஈடுபட்ட நிலையில், சந்தோஷ் அபிமானி யின் மண்டை உடைந்தது.
இதனை அடுத்து, போராட்டக் காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கல் வீச்சில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப் பட்டனர்.