ஈமுகோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் சதுரங்க வேட்டை நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.
பழைமை யான, விலை மதிப்பற்ற இரிடியம் தருவதாக இளைஞர் ஒருவரிடம் ரூ.4 கோடியே 22 லட்சம் மோசடி செய்ததாக தந்தை, மகன் என இருவரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை ஆதீனம், சசிகலாவின் கணவர் நடராசன் ஆகியோருடன் மோசடிக் கும்பலின் தலைவன் குருசாமி நெருக்கமாக இருப்பது போன்ற புகைப் படங்களை போலீஸார் கைப்பற்றி யிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெரிய சடையம் பாளையத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். இவர் ஈரோடு எஸ்.பி-யிடம், பழைமையான சக்தி வாய்ந்த இரிடியம் தருவதாக
அரச்சலூர் அருகேயுள்ள தொட்டியங் கிணத்துப் புதூரைச் சேர்ந்த மோசடிக் கும்பல் ஒன்று என்னிடம் மோசடி செய்தது எனக் கண்ணீருடன் புகார் அளித்தி ருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தொட்டியங் கிணத்துப் புதூரைச் சேர்ந்த குருசாமி மற்றும் அவரின் மகன் நெப்போலியன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும் ஏழு பேரைத் தேடி வருகின்றனர். பழங்கால வடிவமைப்பில் இரும்பினால் பெரிய பானை வடிவத்தில் ஒரு பொருளைச் செய்திருக் கின்றனர்.
அதன் மேல் பித்தளையைப் பூசி, மினு மினுப்புக்காக மெழுகு கோட்டிங் கொடுத் துள்ளனர். சுமார் 26 கிலோ எடையுள்ள அந்தப் பொருளைத் தான் இரிடியம் எனக் காட்டி மோசடி செய்துள்ளனர்.
இதை வீட்டுல வெச்சிருந்தா கோடீஸ்வரன் ஆகிடலாம். நீங்க நினைச்ச தெல்லாம் நடக்கும்’ எனக் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு பலருக்கும் மோசடி வலையை விரித்துள்ளனர்.
அந்த மோசடி வலையில் சிக்கியவர் தான் யுவராஜ். கைதான குருசாமி, மதுரை ஆதீனத்தின் பெயரைச் சொல்லி பலரிடமும் கோடிக் கணக்கில் மோசடி செய்திருக்கிறார்.
தான் மதுரை ஆதீன ட்ரஸ்ட்டில் உறுப்பினராக இருப்பதாகவும், தனக்கும் அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் சொல்லி யிருக்கிறார்.
அந்தக் கிராமத்தினர், ‘கைதான குருசாமியின் மகன் நெப்போலிய னின் திருமணம் 2015-ம் ஆண்டு வெள்ளக் கோவிலில், மதுரை ஆதீனம் தலைமையில் தான் நடை பெற்றது.
அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாது. ஆனால், அவரது வீட்டுக்கு இரவில் கார்களில் பலர் வந்து செல்வார்கள் எனக் கூறினர்.
இது குறித்து ஈரோடு மாவட்டக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண் காணிப்பாளர் ராதா கிருஷ்ணனிடம் பேசினோம். யுவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் குரு சாமியையும் நெப்போலி யனையும் கைதுசெய்தோம்.
எடுத்தவுடனேயே இந்த இரிடியம் இத்தனை கோடின்னு சொல்லாம, அதைப் பத்தின சில கட்டுக் கதைகளைச் சொல்லி மூளைச் சலவைச் செஞ்சிருக் காங்க.
அப்புறம், சாமிகிட்ட பாத காணிக்கை யாக 10 லட்சம் வெச்சாத் தான் அந்தப் பொருளையே காட்டுவோம்னு சொல்லியிருக் காங்க. அவங்களே ஒரு ஆளை செட் பண்ணி, ‘என்ன சார்... எனக்கு வேணும்னு சொல்லி யிருந்தேன்.
இப்ப என்னடான்னா நீங்க வேற யாருக்கோ விக்கறீங்களே? எவ்ளோ விலை யானாலும் பரவாயில்லை, நானே வாங்கிக் கிறேன்’ னு பேச வெச்சி டிமாண்ட் கிரியேட் பண்ணியி ருக்காங்க. ‘இரிடியம் மேல சில படிமங்கள் இருக்கு.
அதை யெல்லாம் க்ளீன் செஞ்சாத்தான் அதோட ஒரிஜினல் பவர் நமக்குக் கிடைக்கும். அதுக்கு 12 லட்ச ரூபாய் செலவாகும். அதுக்காக கனடாவுல இருந்து சயின்டிஸ்ட்டை வர வழைக்கணும்.
அவங்களுக்கு ஃபீஸ் கொடுக்கணும்’ எனக் கொஞ்சம் கொஞ்சமாக யுவராஜிடம் பணத்தைக் கறந்திருக்காங்க. இப்படி நாலு கோடி ரூபாய்க்கும் மேல் பிடுங்கி யிருக்காங்க.
தான் ஏமாற்றப் பட்டோம் என ஒரு கட்டத்தில் யுவராஜு க்குத் தெரிய வர, அவர் புகார் கொடுத்தார். இத்தனைக்கும் யுவராஜ் பி.டெக் படிச்சவர். டி.எஸ்.பி, சப் கலெக்டர் எனப் பலரும் இது போன்ற மோசடி வலையில் வீழ்ந்துள்ளனர்.
விண்வெளி வீரர்கள் உடுத்துவது மாதிரியான உடைகளைத் தயார் செய்து, அதை அணிந்து தான் பார்க்க வேண்டும் எனச் சொல்லியிருக் கிறார்கள். ‘சாதாரண உடையில் இரிடிய த்தைப் பார்க்க முடியாது.
அவ்ளோ ஹீட் அது. அந்த வெப்பத்துல நாம கருகிப் போயிடுவோம்’ என்றெல் லாம் சொல்லி ஏமாற்றியி ருக்கிறார்கள். பாதிக்கப் பட்ட நிறைய பேர் புகார் கொடுக்க வர்றதில்லை.
ஏமாந்துட்டோம்ங் கிற அசிங்கம். பணம் போனாலும் மரியாதை போயிடக் கூடாதுங்குற எண்ணம் தான். ‘உனக்கு எப்படி இத்தனை கோடி பணம் வந்துச்சு’ ன்னு கேள்வி வரும்.
அதுக்கு பயந்தும் பலர் புகார் கொடுக்குற தில்லை. ஏமாந்தவர்கள் புகார் கொடுக்காதது இந்தக் கும்பலுக்கு வசதியாகி விட்டது. மதுரை ஆதீன மடத்தில் உள்ள சிலருடன் குருசாமிக்குத் தொடர்பு உள்ளது.
தேவைப் பட்டால் மதுரை ஆதீனத்தையும் விசாரிப்போம் என்று கூறினார்.கைது செய்யப்பட்ட குருசாமி, சார்! இன்னொரு பார்ட்டி ஒரு சில சி (!) கொண்டு வர்றேன்னு சொல்றான்.
அவன் கிட்ட வாங்கி நான் யுவ ராஜுக்குக் குடுத்துடறேன். என்னை விட்டுடுங்க என அந்த நேரத்திலும் சொல்லி போலீஸாரையே கிறுகிறுக்க வைத்திருக்கிறார்.
அ.தி.மு.க ஆதரவு, ஆதீன ஆதரவு இரண்டையும் விசாரித்தால் உண்மை வெளியே வரும்.