பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை... குடியரசுத் தலைவர் !

12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் நபருக்கு மரண தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை... குடியரசுத் தலைவர் !
போக்சோ சட்டத்தின் படி, 12 வயதிற்கு உட்பட்ட சிறுமி களை பாலியல் வன் கொடுமை செய்யும் நபருக்கு, அதிகபட்ச தண்டனை யாக ஆயுள் முழுவதும் சிறை யிலேயே அடைத்து வைக்க சட்டத்தில் இடமுள்ளது. 

காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப் பட்ட படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. 

குற்றவாளி களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதை யடுத்து, மத்திய அமைச்சரவை போக்சோ சட்டத்தில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை வன் கொடுமை செய்தால் அதிகபட்ச தண்டனை யாக மரண தண்டனை விதிக்க அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது.
இந்த அவசர சட்டத் திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

இதே போல், 12 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளை கூட்டு வன் கொடுமைக்கு உட்படுத்தினாலும், மரண தண்டனை விதிக்க அவசர சட்டத்தில் வழிவகை செய்யப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings