கருவில் இருக்கும் குழந்தையின் டிஎன்ஏ செல்களை மாற்றுவதன் மூலம், அதன் எதிர்காலத்தையும், திறமைகளையும் மாற்ற முடியும் என்று அமெரிக்க மருத்துவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
கலிபோர்னியா வில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஹென்றி கீலி என்று மருத்துவர் இந்த கண்டு பிடிப்பை நிகழ்த்தி உள்ளார்.
2 வருட தீவிர ஆராய்ச்சிக்கு பின் இப்படி கருவில் மாற்றும் தொழில் நுட்பம் வேலை செய்யும் என்று அவர் கூறி யுள்ளார்.
இது என்ன மாதிரியான பயன்களை தரும், மக்கள் இதன் மூலம் எப்படி வளர்ச்சி அடைய முடியும் என்றும் அவர் கூறி யுள்ளார். அதே சமயம் இதில் சில பிரச்சனை களும் இருப்பதாக கூறப்படு கிறது.
என்ன செய்வார்கள்
குழந்தை கருவில் உருவான உடனே அதன் டிஎன்ஏவில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் அதன் குணத்தை மாற்ற முடியும் என்று இவர் கண்டு பிடித்துள்ளார்.
இல்லை யென்றால், நமக்கு தேவையான குணத்துடன் புதிதாக கருவை உருவாக்கி, அதை வளர வைக்க முடியும் என்று கண்டு பித்துள்ளார்.
சோதனைக் குழாய் குழந்தையை போலவே இதை உருவாக்கி, பின் பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி யுள்ளார்.
யார் வேண்டும்
இதை வைத்து நமக்கு எப்படிப் பட்ட குழந்தை வேண்டுமோ அப்படி உருவாக்கலாம்.
உதாரணமாக, கோஹ்லி போல, ரஹ்மான் போல, ஒபாமா போல, ரஜினி போல குழந்தை வேண்டும் என்றால், அது போல டிஎன்ஏ வடிவமைத்து திறமையான நபர்களை உருவாக்க லாம்.
நாம் கருவில் செய்யும் மாற்றம் வளர வளர வெளிப்படும் என்று கூறப்படு கிறது.
எப்போது வரும்
இந்த தொழில் நுட்பம் இன்னும் முழுமை யாக வெற்றி பெ றவில்லை. இதில் இன்னும் பல சோதனைகள் நடத்த வேண்டி இருக்கிறது. குறைந்தது 5 வருடங் களாவது ஆகும்.
அதே போல் இதை எல்லா நாடுகளும் அப்படியே ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்த வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படு கிறது. பெரு ம்பாலான நாடுகள் இதற்கு தடை விதிக்க வாய்ப்பு இருக்கிறது.
என்ன பிரச்சனை
இதில் சில பிரச்சனை இருக்கிறது. நாம் உருவாக்கும் குழந்தை முழுக்க முழுக்க அதே குண நலனுடன் இருக்கும் என்று உறுதியாக கூற முடியாது.
அடுத்ததாக இப்படி, மாற்றுவதன் மூலம், அந்த குழந்தைக்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சனை ஏற்படலாம்.
உதாரண மாக சிந்திக்கும் திறனில் மாற்றம் ஏற்படலாம், என்று கூறப்படு கிறது. இது முழுக்க முழுக்க பயன் பாட்டிற்கு வரும் போது தான் உண்மை தெரிய வரும்.