மருத்துவ படிப்புக்கான இந்த வருட நீட் தேர்வின் ஆடை கட்டுப் பாடுகளை வெளியிட்டது சி.பி.எஸ்.இ.
மருத்துவக் கல்லூரி களில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய வற்றைத் தொடர விரும்பும் மாணவர்களுக் கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக் கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை, நாடு முழுவதும் நடைபெற வுள்ளது. தற்போது அதற்காக ஆடை கட்டுப் பாடுகளை சி.பி.எஸ்.இ வெளி யிட்டுள்ளது.
அவர்கள் தெரிவித் துள்ள கட்டுப் பாடுகள், வெளிர் நிறத்தி லான ஆடைகளை அணிய வேண்டும். அரைக் கை சட்டைகள் மட்டுமே அனுமதி க்கப்படும்.
ஷூ அணியக் கூடாது. பூக்கள், பேட்ஜ்கள் உள்ளிட்ட வற்றைப் பயன் படுத்தக் கூடாது. பெரிய பொத்தான் களைக் கொண்ட சட்டைகளை அணியக் கூடாது.
குறைவான உயரமுள்ள சாதாரண செருப்பு களையே அணிய வேண்டும். தொலைத் தொடர்பு சாதனங்கள் ஜியோமெட்ரி பாக்ஸ் அல்லது பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள், வாட்ச்
மற்றும் உலோகப் பொருள்கள் ஆகிய வற்றையும் எடுத்து வரத் தடை விதிக்கப் பட்டுள்ளது. நீர் ஆடை கட்டுப் பாடுகள் கடந்த வருடம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.
துப்பட்டா அணியக் கூடாது, ஜீன்ஸ் அணியக் கூடாது, பாக்கெட் வைத்த சட்டை போடக் கூடாது எனப் பல கட்டுப் பாடுகளை விதித்தது சி.பி.எஸ்.இ.
மேலும், டார்ச் அடித்து காது முதல் உள்ளாடை வரை எனத் தீவிர மாகச் சோதனை செய்யப் பட்ட பின்னரே மாண வர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப் பட்டனர்.
மாணவி களின் உள்ளாடைகளைச் சோதனை செய்த சம்பவம் கடந்த வருடம் மிகப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments