அமேசான் நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் `ரிங்' என்னும் வீடியோ காலிங் பெல் தயாரிக்கும் நிறுவன த்தை 6,500 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
இந்தச் செய்தியை, நம்மில் எத்தனை பேர் படித்தி ருப்போம் எனத் தெரியாது. ஆனால், உலகமே உற்று கவனிக்க வேண்டிய, விவாதிக்க வேண்டிய மிக முக்கிய மான செய்தி இது.
காலிங்பெல் எல்லாம் வழக்கொழிந்து, நாம் மொபைலில் மிஸ்டுகால் கொடுத்து கதவு திறக்கச் சொல்ல ஆரம்பித்து விட்ட இந்தக் காலத்தில், `காலிங் பெல்லில் முதலீடா?' எனத் தோன்று கிறது இல்லையா!
அதுவும் `இதில் 6,500 கோடி ரூபாய் பணம் போடுவ தென்றால், அவர்கள் பைத்தியக் காரர்களாகத் தான் இருக்க வேண்டும்'
என்று கூட நினைக்கத் தோன்றும். ஆனால், உலகின் நம்பர் ஒன் நிறுவன மாக போட்டி போட்டுக் கொண்டிரு க்கும் அமேசான் ஒன்றும் முட்டாள் அல்ல.
உண்மையில், இந்த ரிங் பெல் என்பது பக்கா க்ளாரிட்டி யுள்ள, ஹெச்டி கேமரா வுடன் 180 டிகிரி பார்க்கக் கூடிய ஒரு ஹைடெக் டோர் பெல். எப்போதும் இன்டெர் நெட்டில் இணை ந்திருக்கும் இது, நீங்கள் வீட்டுக்குள் இருக்கும் போது மட்டு மல்ல,
வெளியில் எங்கேயாவது இருக்கும் போதும் யாராவது உங்கள் வீட்டுக்கு வந்தால், உங்கள் மொபை லுக்கோ, கம்ப்யூட்ட ருக்கோ தகவல் அனுப்பும். நீங்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே யார் வந்திருப்பது எனப் பார்த்து அவருடன் பேசவோ
அல்லது தேவையான தகவல் களைக் கொடுத்து இதன் உதவி யுடன் அவர்களைத் திருப்பி அனுப்பவோ முடியும்.
அவர்கள் வந்து போன வீடியோவை பிறகு தேவைப்படும் போது உங்கள் சேமிப்பி லிருந்து பிளே ஃபார்வேர்டு, பேக்வெர்டு செய்து பார்க்கவும் முடியும்.
மேலும், இதனுடன் இணைந்த `அமேசான் கீ ஹோம் கிட்'டை பேக்கேஜாக வாங்கிக் கொண்டால்,
கருப்பாக இருக்கும் அந்தரங்க பகுதியை வெண்மையாக்க எளிய வழி !
நீங்கள் உங்கள் கதவை பூட்டு சாவி இல்லாமல் ரிங் பெல்லைக் கொண்டு டிஜிட்டலாய் லாக் செய்து கொள்ள முடியும்.
இதனால், மனைவி வீட்டின் உள்ளே படுத்திரு க்கும் போது தாமதமாய் வரும் கணவருக்கு எழுந்து போகத் தேவை யில்லாமல் படுக்கையில் இருந்த படியே கதவைத் திறக்கலாம்
அல்லது முன்பே செட் செய்து கொண்ட ஒரு பாஸ் நம்பர் மூலம் கணவரே மனைவியை எழுப்பாமல் கதவைத் திறந்து கொள்ள முடியும்.
வீட்டு வேலை செய்பவர்கள் வருகையில் அலுவலக த்தில் இருந்த படியே கதவைத் திறந்து விடுவதுடன், அவர்கள் வீட்டினுள் என்ன செய்கி றார்கள் என்றும் இந்த பேக்கேஜில் இணைந் திருக்கும் வீட்டுக்கு ள்ளான கேமரா மூலம் உங்களால் கண் காணிக்கவும் முடியும்.
பார்க்க இது உபயோகமாய்த் தானே தெரிகிறது என்கிறீர்களா?
ஆனால், உண்மையில் 20 வருடங் களுக்கு முன் ஆன் லைனில் புத்தகம் விற்க வந்த நிறுவனம், இன்று ஏன் அக்கறை யாய் நமது வீட்டுப் பாதுகாப்பில் இவ்வளவு பணத்தைக் கொட்டுகிறது என்று யோசித்தால் சந்தோஷத் துக்குப் பதில் கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது.
ஏனென் றால், அமேசான் புராடெக்ட்ஸ் என்று அவர்களது பொருள் களில் நமக்கு நன்கு பரிச்சய மான பொருள் களை மட்டும் ஒரு வரிசையில் கோத்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரியும். 20 வருடங் களுக்கு முன்னர்,
முதன் முதலில் அமேசான் நிறுவனம் ஆரம்பிக்கக் காரணம், செய்தித் தாளில் வந்த ஒரு பெட்டிச் செய்தி தான் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், எதிர் வரும் பத்து வருடங் களில் இ-காமர்ஸ் 2000 மடங்குக்கு மேல் அதிகம் ஆகும் என்றதைப் படித்ததால் அந்தத் துறையில் தொழில் தொடங்க லாம் என ஆரம்பிக்கப் பட்ட நிறுவனம் தான் அமேசான்.
குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய மருத்துவம் !
இந்த நிறுவன த்தின் லோகோ வின் கீழே புன்னகை போல ஓர் அம்புக்குறி இருக்குமே கவனித்திருக் கிறீர்களா? அது Amazon-ல் A-ல் ஆரம்பித்து Z-ல் முடியும். A-Z எல்லாமே கிடைக்கும் என்பதன் அடையாளம் தான் அது.
முதலில் சில கம்ப்யூட்டர் பொருள்கள் விற்கலாம் என யோசித் தார்கள். பிறகு, புத்தகங்களுக் கான தேவையானது எல்லா ஊர்களிலும் ஒன்றைப் போலத் தான் இருக்கும் என்று புத்தகங்கள் விற்க ஆரம்பித் தார்கள்.
ஆனால், பத்து வருடங் களுக்குப் பிறகும் வியாபாரம் இல்லாமல் மந்தமாகவே போக, வீட்டுக்குத் தேவையான மற்ற பொருள் களையும் விற்க ஆரம்பித் தார்கள்.
வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. வியாபாரம் இருந்தாலே வேறு தொல்லை களும் வரும் தானே? புதிதாய் போட்டி கம்பெனிகள் முளைக்க ஆரம்பித்தன.
அதேச மயத்தில், நிறைய உற்பத்தி யாளர்கள் தங்கள் பொருள் களை விற்க அமேசான் நிறுவன த்தை அணுகவும் தொடங்கினர்.
அமேசானு க்கு, இப்போது சர்ச் இன்ஜினில் தேடுபவ ர்களுக்கு முதலில் வருவது மட்டும் போத வில்லை. மற்ற எல்லோ ரையும் போல பேப்பர் விளம்பரங் களும்,
பேனர் விளம்பரங் களும் பெரிதாக உதவாது என்பதையும் அவர்கள் உணர்கி றார்கள். இப்போது அவர்களுக்கு பொருள் களை விற்க வேறு டெக்னாலஜி தேவைப் படுகிறது.
முதலில் எதையாவது வாங்கலாம் என்று வரும் உங்களுக்கு, தாங்கள் விற்கும் ஆயிரக்கணக் கான பொருள் களையும் தங்கள் பக்கங் களில் வகை வாரி யாகக் காட்டுகி றார்கள்.
பிறகு, நீங்கள் தேடுவதி லிருந்தே உங்கள் தேவை களை யூகிக்கி றார்கள். இப்போது அவர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்கி றார்கள்.
அதன் பிறகு நீங்கள் தேடிய, அதன் தொடர்பான பொருள்கள் நீங்கள் ஆன் லைனில் வேறு பக்கங் களில்
இருக்கும் போதெல் லாம் தொடர்ச்சி யாக உங்கள் கண்ணில் படச்செய்து அவர்கள் உங்களை வாங்க வைக்கிறார் கள்.
ஆனால், வியாபார த்துக்கு இதுவும் போத வில்லை. நீங்கள் அமேசானைத் திறந்து தேடும் பொருளை மட்டும் உங்களிடம் விற்றால் பத்தாது. `
உங்கள் விருப்பம் என்ன வென்று தெரிந்தால், அதை வைத்து உங்களு க்கு ஆசை காட்டலாம்… அதற்கு என்ன செய்யலாம்’ என யோசிக்க ஆரம்பிக் கிறார்கள்.
நீங்கள் கம்ப்யூட்டரோடு, ஸ்மார்ட்போன் வைத்திருக் கிறீர்கள். அதன் மூலம் ஜீ.பி.எஸ்-ஸில் நீங்கள் இருக்கும் இடம் தெரியும்.
முன்பெல் லாம் அவர்களால் நீங்கள் எந்த மொழியில் டைப் செய்கிறீர் களோ, அந்த மொழியில் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், இப்போது டிரான்ஸ் லேட்டர் வந்து விட்டது. நீங்கள் தமிழில் டைப் செய்வதை யும் அவர்களால் ஆங்கிலத்தில் புரிந்து கொள்ள முடிகிறது.
வாய்ஸ் டைப்பிங் இருக்கிறது. நீங்கள் பேசுவதை அது டைப்பு கிறது. இன்னும் கொஞ்ச நாளில் உங்கள் மனைவி உங்களிடம், ``சாயங்காலம் சீக்கிரம் வாங்க,
சேலை வாங்க கடைக்குப் போகணும்” என்று சொல்லி போனை வைத்த மறு விநாடி உங்கள் மொபை லிலோ, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனிலோ ஆன்லைன் சேலை விளம் பரங்கள் ஒளிரலாம்.
சரி, ஆன் லைனில், மொபைலில் உங்களைக் கண்காணித்தா கிவிட்டது. உங்கள் பொழுது போக்கு நேரத்தில் நீங்கள் அவர்க ளுடன் இருந்து தொடர்பைத் துண்டித்தி ருப்பீர்களே?
அந்த நேரத்தை எப்படி உபயோகிக் கலாம் என்று யோசிக்க ஆரம்பிக் கிறார்கள். பொழுது போக்குக் காக, நீங்கள் புத்தகம் படிப்பீர்கள் என்று நீங்கள் படிக்கும் புத்தகத்தை யும்,
மார்பக காம்பில் இந்த பிரச்சனை இருந்தால் இத யூஸ் பண்ணுங்க !
நீங்கள் தேடும் பொருள் களையும் இணைக்க லாம் என்று நீங்கள் படிக்கும் புத்தகத்தை கிண்டில் என்று இ-புக் ஆக்கிப் பார்க்கிறார் கள்.
ஆனால், நீங்கள் படிப்பதில் ஆர்வம் குறைந்த வர்களாய் இருக்கி றீர்கள். அங்கே உங்களைக் கவர முடிய வில்லை. அடுத்து அதிகம் எங்கே சுற்றுகி றீர்கள் என்று பார்த்தால் சினிமா.
மெதுவாக `அமேசான் பிரைம்' என்று உங்கள் சினிமா நேரத்தைக் குறி வைக்கிறார் கள். பிடித்தப் படங்களை அவர்களே வழங்கு கிறார்கள்.
உங்கள் போனி லிருந்து டிவி-யை இணைக்க ஃபயர் ஸ்டிக் தருகி றார்கள். டிவி-யை ஸ்மார்ட் டிவி ஆக்குகிறார்கள். ஆனால், நீங்கள் டிவியையும் ஆஃப் செய்து விட்டு சும்மா இருக்கி றீர்கள். அந்த நேரத்தை விடுவானேன். என்ன செய்யலாம்?
பேசாமல் உங்கள் வீட்டையே ஸ்மார்ட் வீடாக்கி விட்டால் போதுமே. எந்நேரமும் உங்களை கவனிக்க லாம் அல்லவா? அலெக்ஸா அறிமுகம் ஆகிறது உங்களுக்கு. நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்… சும்மா சொன்னால் போதும்.
அது டிவியை ஆன் செய்கிறது, ஏசியின் அளவைக் குறைக் கிறது. கேட்டால் போதும். அது பீட்சா ஆர்டர் செய்கிறது. மீதி நேரங்களில் அது தேமேயென சும்மா இருக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக் கிறோம்.
ஆனால், உண்மை யில் அது நம்மைக் கவனித்துக் கொண்டிருக் கிறது. இப்போது யோசித்துப் பாருங்கள். உங்கள் வீட்டில் நீங்கள், உங்கள் மனைவி, உங்கள் மகன்
மூன்று பேரும் வெவ்வேறு அறைகளில் உள்ள டி.வி-க்களில் `மெர்சல்' படம் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள். விளம்பர இடைவேளை. உங்கள் டி.வி-யில் இப்போது நீங்கள் வாங்கலாம் என்று பேசிக் கொண்டிருந்த செருப்பு விளம்பரம் ஓடுகிறது.
அதே சமயம், அடுத்த அறையில் உங்கள் மனைவி யின் டி.வி-யில் அவருக் கான நகை விளம்பரம்… அதிலும் குறிப்பாக, அந்த டைமண்ட் நெக்லஸ் விளம்பரம் ஓடுகிறது.
ஆனால், மகன் அறை யிலோ அவன் கேட்டு அழுத லெகோ டாய்ஸ் விளம்பரம். சரி, இப்போது மூவரும் ஒரே அறையில் உட்கார்ந்து அதே படத்தைப் பார்த்துக் கொண்டிருக் கிறீர்கள்.
பச்சை மிளகாய்.. சிவப்பு மிளகாய் - இவற்றில் சிறந்தது எது?
இப்போது என்ன விளம்பரம் வரும் தெரியுமா? யாருடைய முடிவு முதலில் ஜெயிக்குமோ அவர்கள் சார்ந்த விளம்பரம் தான் திரையில் ஒளிரும்.
ஏனென் றால், செலவு செய்வதில் யார் உண்மை யான குடும்பத் தலைவர் என்பதை அலெக்ஸா உங்களு க்குத் தெரியாமல் டி.விக்கு சொல்லி யிருக்கும்.
ஆனால், இவ்வளவு செய்தாலும் அலெக்ஸா விடம் ஒரு குறை இருக்கிறது. அலெக்ஸா வெறும் மூளை தான். காது இருப்பதால் கவனிக்கவும், வாய் இருப்பதால் கொஞ்சம் பேசவும் செய்கிறது.
ஆனால், அதனால் பார்க்க முடிவ தில்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யத் தான் இப்போது ரிங் பெல் அறிமுகம் ஆகிறது. ஆம்… அலெக்ஸா மூளை என்றால் ரிங் அதன் கண்கள். முதலில் வாசலைப் பாதுகாக்க என்று தான் வருகிறது.
ஆனால், இப்போது நீங்கள் வாங்கி யிருக்கும் பேக்கேஜ் கிட் மூலம் அது உள்ளேயும் பார்க்கப் போகிறது. இப்போது உங்கள் வீட்டில் என்ன பொருள் இருக்கிறது என்று அதற்குத் தெரியும். என்ன சாப்பிடுகி றீர்கள் என்று அதற்குத் தெரியும்.
என்ன உடுத்து கிறீர்கள் என்று தெரியும். இனி அது உங்கள் வீட்டில் இல்லாத பொருள் களை அது தனது கண்களால் பார்க்க ப்போகிறது. நீங்கள் வாங்க வேண்டிய பொருள் களை நீங்கள் பேசுகை யில் உற்றுக் கேட்கிறது.
இனி உங்கள் வீட்டு விளம் பரங்களில் வர வேண்டி யது எது என்றும் அது தான் தீர்மானிக் கவும் போகிறது. இப்போது உங்கள் வீடு அமேசான் வீட்டின் வெறும் ஒரு புள்ளி தான். உங்கள் வீட்டைப் போலவே,
எல்லா வீட்டையும் புள்ளிக ளாய் இணைத்து உலக அளவில் ஒரு பெரிய கோலமும் அமேசான் போட்டு விட்டது. ஆக, இப்போது உபயோகிப் பாளர்களை தயார் படுத்தி விட்டது.
அடுத்து, வெளியி லிருந்து இதற்கெல் லாம் சப்ளை ரெடி செய்ய வேண்டுமே! இனி, அவர்கள் ஊருக்கு ஊர் ரீடெய்ல் மார்ட் தொடங்கப் போகிறார்கள். நீங்கள் போகவே வேண்டாம்.
அலெக்ஸா விடம் சொன்னால், அது அமேசானிடம் சொல்லி… அடுத்த சில மணியில் பொருளை உங்கள் வீட்டில் இறக்கி விடும்.
அதற்கான முன்னேற் பாடாய் `அமேசான் நவ்' என்ற பெயரில் ஆர்டர் செய்த இரண்டு மணி நேரத்தில் மளிகைப் பொருள்கள்,
காய்கறிகள் என தினசரிப் பொருள் களை இப்போதே அவர்கள் டெலிவரி செய்து பார்த்துக் கொண்டிருக் கிறார்கள். இப்போது ரிங் வந்து விட்டது என்று வைத்துக் கொள் ளுங்கள்.
நீங்கள் வேறு கம்பெனி களில் ஆர்டர் செய்தால், அவர்கள் டெலிவரி க்கு வரும் போது கதவைத் திறக்கட்டுமா, வேண்டாமா என்று ரிங் பெல் உங்களை கேள்வி கேட்கும்.
அமேசானில் ஆர்டர் செய்தால், டெலிவரியை கதவைத் திறந்து உள்ளே கதவு அருகில் வைக்க அமேசான் உத்தர வாதத் துடன் உங்களை கேட்காமல் அதுவே அனுமதித்து விடும்.
நாள்பட, நாள்பட உங்களுக்கு இதுதான் வசதி யாகத் தெரியும். நீங்கள் இப்போது அமேசானின் செளகரிய ங்களுக்கு அடிமையாகி இருப்பீர்கள்.
எவ்வளவு பெரிய கட்டமைப்பு பாருங்கள்!
உலகை கூகுள் ஒரு வழியில் ஆள்கிறது என்றால் அமேசான் இன்னொரு வழியில் ஆளப் போகிறது. இதைத் தவிர்க்க, தடுக்க நம்மால் எதுவும் செய்ய முடியும் என நம்புகி றீர்களா?
கூகுளும் அமேசானும் உங்களது ஒவ்வோர் அசைவையும் கண்காணிக் கிறது என்று யாராவது
சொன்னால் நம்பாதீர்கள். உண்மையில் உங்களது ஒவ்வோர் அசைவையும் அதுதான் தீர்மானிக் கிறது.
ஆனால், இதை எதிர்க் கொள்ள நமக்கு இன்னொரு வழியும் இருக்கிறது. அது அவர்கள் வழியிலேயே நாமும் அவர்களை டீல் செய்வது தான்.
நம்மை வியாபாரம் செய்யும் இவர்களை வைத்தே, நாம் வியாபாரம் செய்ய ஆரம்பித் தால்… செய்து லாபம் பார்க்க ஆரம்பித் தால் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
ஒரு வாடிக்கை யாளராக நாம் ஒரு பொருளின் விலையை அதிகம், குறைவு என எப்படி முடிவு செய்கிறோம்?
உதாரணத்து க்கு, ஒரு கிலோ துவரம் பருப்பு வாங்க வேண்டியிருக் கிறது என வைத்துக் கொள்வோம். பத்து கடைகளில் விசாரிப்போம்.
எல்லோரும் 180 ரூபாய் என்று விலை சொல்கி றார்கள். ஒரே ஒரு கடையில் மட்டும் 150 என்று சொன்னால், அது நமக்கு விலை குறைவு என்று வாங்கிக் கொள் கிறோம்.
ஆனால், அதை விளையும் இடத்தி லேயே வாங்கினால் அதன் விலை வெறும் 40 ரூபாய் தான் என்றும், அது தான் அதற்கான உண்மை விலை என்பதும் நமக்குத் தெரியவே தெரியாது.
பிறகு எப்படி 40 ரூபாய் பொருள் நம்மிடம் வரும் போது 180 ரூபாய் ஆனது என்றால்… அது தான் வாங்கு பவருக்கும் விளை விக்கும் விவசாயி க்கும் இடையில் கைமாற்றும் பத்துப் பதினைந்து இடைத் தரகருக் கான லாபம்.
இப்போது அமேசான் எப்படி உங்களுக்கு குறைந்த விலையில் பொருள் களைக் கொடுக்கிறது பாருங்கள். வாடிக்கை யாளருக்கும் உற்பத்தி யாளருக்கும் இடையே இடைத் தரகர்கள் இல்லை. ஒன்லி அமேசான்.
அது பொருள் களை செய்பவர் களிடம் வாங்கி அதன் கிடங்கில் அடுக்கிக் கொள்கிறது. கேட்பவர் களுக்கு சப்ளை செய்கிறது. அதனால் குறைந்த விலையில் கொடுக்க முடிகிறது.
இப்போது நமது விவசாயிகள் ஊருக்கு ஒரு சங்கம் அமைத்து, தங்கள் அரிசி, பருப்புகளை ஒரு பிராண்ட் செய்து, அமேசான் வழியாக இன்றைய மார்க்கெட் விலைக்கு குறை வாகவோ அல்லது கிலோ 100 ரூபாய்க்கோ விற்கத் தொடங்கினால்?
அமேசானு க்குக் கிடைக்கும் லாபம் நமது விவசாயி க்கும் கிடைக்கும் தானே?
உங்கள் அரிசியை யும் பருப்பை யும் எதை யாவது செய்து அமேசான் விற்று விடும். அமேசானு க்கு கொடுத்தது போக, நிச்சயமாக முழு லாபமும் விவசாயி க்கு வந்து சேர்ந்து விடும்.
ஒரு வேளை, நமது விவசாயப் பொருள்கள் அமேசானு க்கு அதிக லாபத்தைத் தர ஆரம்பித் தால், அவர்கள் நமது பொருளை உலக மெல்லாம் கொண்டு செல்லக் கூடும். லாபம் தரும் தொழிலை விட
விரும் பாமல், ரிங் பெல்லை 6,500 கோடி ரூபாய் கொடுத்துக் காத்தது போல, நமது விவசாயம் செழிக்க அவர்களே கூட ஏதும் வழி வகைகள் செய்யக் கூடும். எல்லாம் ஒரு நம்பிக்கைக் கணக்குத் தான்.
உங்களில் யாராவது ஒருவர் இப்போது வழக்கம் போல அந்தத் தரகர்களும் நம் நாட்டவர்கள் தானே, அவர்கள் பிழைத்தால் என்ன தவறு?
இப்போது நீங்கள் சொல்லும் நிவாரணத் தால், இந்தப் பணம் மொத்தமும் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவன த்துக்குத் தானே போகப் போகிறது
என்று கேட்பீர்க ளானால், செத்துக் கொண்டிரு க்கும் விவசாய மும் விவசாயி யும் செழிக்க வேறு வழி சொல்லுங் கள்.
ஒரு வேளை, இங்கே சொல்வது நடக்க ஆரம்பித் ததும் தரகர்கள் கொள்ளை லாபம் அடிப்பதி லிருந்து இறங்கிக் கூட வரலாம்.
அப்போது நமது தரகரும் விவசாயி யும் சேர்ந்து பிழைக்க வும் வாய்ப்பிருக் கிறது. இது ஒரு யோசனை தான்.
ஆனால், நிதர்சனம்? இதை எதிர்த் தாலும் சரி... ஆதரித்தா லும் சரி, பேசுவதை விடுத்து செயல்ப டுத்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித் தால் நிச்சயம் நமக்கு நன்மைகள் மட்டுமே நிகழும்!