கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கும் பெண்ணிட மிருந்து தனக்கும் தனது குடும்பத்தி னருக்கும்
பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கதறியபடி நெல்லை ஆட்சியரைச் சந்தித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லைச் சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர், சொர்ணம். இவரது கணவர் சில வருடங் களுக்கு முன்பு இறந்து விட்டார்.
3 பெண் குழந்தை களையும், இரு ஆண் மகன் களையும் இவரே வளர்த்து வந்தார்.
இவரது மூத்த மகள் சுதாவு க்குக் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஏற்பாடானது.
அதற்கு பணம் தேவைப் பட்டதால், மணி என்பவரது மனைவி ராஜம்மா ளிடம், 1,20,000 ரூபாய் கடனாகப் பெற்றார்.
அந்தக் கடனுக் காக மாதம்தோறும், 14,000 ரூபாய் வட்டி யாகச் செலுத்தி வந்துள்ளார்.
கடந்த 2016 நவம்பர் மாதம் முதல் 2017 டிசம்பர் மாதம் வரையி லும் 13 மாதங் களுக்கு 1,82,000 ரூபாய்
வட்டியாகச் செலுத்தி வந்த நிலை யில், தொடர்ந்து அவரால் பணம் செலுத்த முடிய வில்லை.
சொர்ணத்தின் இரு மகள்கள் ஜவுளிக்கடையில் வேலை செய்தும், மகன்கள் இருவரும் கொத்தனார் வேலை
செய்தும் சம்பாதித்த பணம் முழு வதையும் வட்டியாகச் செலுத்தி வந்த நிலையில்,
இன்னும் 1,50,000 ரூபாய் பணம் உடனடியாகத் தர வேண்டும் என வட்டிக்குக் கொடுத்த ராஜம்மாளும் அவரது மகன் சக்தியும் மிரட்டி யுள்ளனர்.
ஆனால், சொர்ணத் திடம் பணம் இல்லாத தால் கால அவகாசம் கேட்டுள்ளார்.
அதற்காக அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தினமும் வீட்டுக்கு வந்து பணம் கேட்டு மிரட்டிய தால் அச்சமடைந்த சொர்ணம், பயம் காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
அதில், தன்னையும் தனது குடும்பத்தி னரையும் மிரட்டும் ராஜம்மாள், அவரது மகன் சக்தி ஆகியோரிட மிருந்து
தங்களது உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தி யுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கு மாறு நெல்லை மாநகரக் காவல் துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.