முதல் குறைந்த கட்டண மருத்துவமனை... தமிழகத்தில் !

மத்திய அரசின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், தமிழக த்தில் முதல் முறையாக கோவையில் மலிவு கட்டண மருத்துவமனை துவங்கப் பட்டுள்ளது.
முதல் குறைந்த கட்டண மருத்துவமனை... தமிழகத்தில் !
சென்னைக்கு அடுத்த படியாக, கோவையில் பல்நோக்கு மருத்துவ மனைகள் அதிகமாக வுள்ளது. 

சென்னையிலேயே இல்லாத சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த மருத்துவ மனைகளும் 

இங்கு இருப்பதால், கோவை மருத்துவம் சார்ந்த சுற்றுலா நகரமாகவும், உயர்ரக சிகிச்சைக்கான மையமாகவும் உருவெடுத் துள்ளது. 

தற்போது ஏழை மக்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு கோவை அரசு மருத்துவ மனையை விட்டால், வேறிட மில்லை என்ற நிலை உள்ளது. 

இந்த கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், மத்திய அரசின் மலிவு விலை 

மருந்த கத்தை தொடர்ந்து மத்திய அரசின் மலிவு கட்டண மருத்துவ மனை தமிழக த்தில் முதல் முறை யாக கோவையில் துவங்கப் பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக நலிவடைந் தவர்களுக்கு பேருதவியாக செயல்பட்டு வரும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகத் திற்கு 

பொது மக்களிடையே கிடைத்த வரவேற்பின் வெற்றியாக இந்த குறைந்த விலை மருத்துவமனை திறக்கப் பட்டுள்ளது. 

பிரதமரின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், மலிவு விலையில் மருந்துகள் வாங்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக இந்த மருத்துவ மனைகள் நாடு முழுவதும் துவக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு பகுதியாக, தனியார் (இ.வி.எஸ்.,) நிறுவனம் சார்பில், மலிவு கட்டண மருத்துவமனை, கோவை சித்தாபுதுார், சரோஜினி வீதியில் துவக்கப் பட்டுள்ளது. 

நோயாளி களுக்கான மருத்துவ கட்டணம், ரூ.50 கட்டணம், ஆயிரத்து 500 சதுர அடியில் கட்டமைக்கப் பட்டுள்ள இந்த மருத்துவ மனையில், 

குழந்தை களுக்கான சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், நரம்பியல் நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர், 
நீரிழிவு நோய் நிபுணர், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர், மூட்டு மற்றும் 

இருதய நோய் நிபுணர் என, ஆறு சிறப்பு மருத்துவர்கள், மத்திய அரசின் குறைந்த விலை மருந்தகம், ஆய்வகம் உள்ளது. 

காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரையில் நோயாளி க்கு சிகிச்சை வழங்கப் படுகிறது. 

ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே போன்ற வசதிகளுக் காக அருகில் உள்ள மருத்துவ மனைகளுடன், ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளது. 

நலிவடைந் தோருக்கு இந்த மருத்துவமனை மிகவும் உதவியாக இருக்கும் என நம்பப் படுகிறது என்று மருத்துவமனை நிர்வாக இயக்குனர் ஷிரில் தெறிவித் துள்ளார்.
ஏழை, எளிய மக்களு க்கு எட்டாக் கனியாக உள்ள உயர்தர மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற அரசின் இந்த முயற்சி தொடர்பாக, 

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே மருத்து வர்களின் கோரிக்கை யாக உள்ளது.
Tags:
Privacy and cookie settings