வழக்கறிஞ ராக பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதி ஆன முதல் பெண் என்ற பெருமையை இந்து மல்ஹோத்ரா என்பவர் பெறுகிறார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க இந்து மல்ஹோத்ரா மற்றும் உத்தரா கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே எம் ஜோசப் ஆகிய இரு பெயர்களை கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை த்திருந்தது.
இதில் இந்து மல்ஹோத்ரா வுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப் பட்டிருந்தது. இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி யுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ராவை உச்ச நீதிமன்ற நீதிபதி யாக நியமிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி யளித்திருந்தது.
பொதுவாக மூத்த வழக்கறி ஞர்கள் உயர் நீதிமன்றங் களில் நீதிபதி களாக பணியாற்றிய பின் உச்சநீதி மன்றத்துக்கு மாற்றப் படுவர்.
இதற்கிடை யில் உச்ச நீதிமன்ற நீதிபதி யாக உத்தராகண்ட் மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம் .ஜோசப்பை பரிந்துரைத்த முடிவை பரிசீலிக்கு மாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்ற கொலிஜிய த்தை அரசு இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத் திற்கும் கருத்து வேறுபாடு நிலவுவது தெரிய வந்துள்ளது.