விதவை மனைவியுடன் தம்பிக்கு கட்டாயத் திருமணம் !

பல முக்கியத் துறைகளில் இந்தியா மேம்பட்டு உயர்தரம் அடைந்துள்ளது என மார்தட்டிக் கொண்டிருக்கும் அதே தருணத்தின்,
விதவை மனைவியுடன் தம்பிக்கு கட்டாயத் திருமணம் !
இந்தியாவின் பல மாநிலங்களில் இருக்கும் பல கிராமப் புறங்களில் இன்னும் பழக்கம் என்ற பெயரில் பின்பற்றி வரப்படும் சாங்கி யங்கள் காரணமாக பல கொடுமைகள் நடந்தேறி வருகின்றன. 

அப்படி பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கொடுமை யின் காரணமாக தான் ஒரு பதின் வயது சிறுவனின் உயிர் ஓரிரு மாதங் களுக்கு முன்னர் பலியானது. 

இறந்து போன சொந்த அண்ணின், விதவை மனைவியை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் 15 வயதே நிரம்பிய சகோதரன் தற்கொலை செய்துக் கொண்டான். 

பீகார் கிராமம்! 

இந்த சம்பவம் பீகாரில் உள்ள ராம்னா வினோபா நகர் என்ற கிராமத் தில் நடந்துள்ளது. 

15 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த சிறுவன் கட்டாயத் திருமணத் திற்கு பிறகு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டான். 

10 வயது மூத்தவர் ! 
அண்ணனின் விதவை மனைவி பதின் வயது சகோதரனை காட்டிலும் பத்து வயது மூத்தவர். 

சிறுவனை கட்டாயப் படுத்தி திருமணம் செய்து வைத்த அவனது தந்தை சந்திரேஷ்வர் மற்றும் திருமண செய்த பெண் ரூபி தேவியின் பெற்றோர் ராம் பிரவேஷ் தாஸ், முதூர் தேவி மீது காவல் துறை அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதிந்து கைது செய்துள்ளனர். 

கட்டாயம்! 

அக்கம் பக்கத்து வீட்டினர் அந்த சிறுவனை இரு வீட்டாரும் கட்டாயப் படுத்தி திருமணம் செய்துக் கொள்ள வைத்தனர் என்று கூறு கிறார்கள். 

மேலும், அந்த சிறுவனின் அண்ணன் சதீஷ் மற்றும் ரூபி தேவிக்கு திருமண மாகி, ஒரு மகள் மற்றும் மகன் இருக்கி றார்கள். 

சதீஷ் ஒரு தனியார் எலக்ட்ரிக் நிறுவன த்தில் பணி புரிந்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார். 

விழிப்புணர்வு! 
பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் மாநில அளவில் குழந்தை திருமணங் களை எதிர்த்தும், அதுகுறித்த விழிப் புணர்வும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. 

பீகாரின் இந்த ஒரு மாநில த்தில் மட்டும் தான் இப்படியான வினோத திருமண சடங்ககள் நடக்கின்றன என நினைத்திட வேண்டாம். 

பல மாநிலங்களில், பல பகுதிகளில் இப்படியான சில விசித்திர திருமண முறைகள் கடைப் பிடிக்கப் படுகின்றன. 

ஹிமாச்சல் பிரதேசம்! 

ஹிமாச்சல் பிரதேசத் தில் வாழ்ந்து வரும் ஓர் இனத்தை சேர்ந்த மக்கள், அண்ணன் தம்பி களுக்கு ஒரே பெண்ணை திருமணம் செய்து வைக்கும் வழக்கம் கொண் டுள்ளனர். 

இவர்கள் மத்தியில் தொப்பி அணியும் பழக்கம் இருக்கிறது. யார் ஒருவர் அந்த பெண்ணுடன் இருக்கிறாரோ, 

அவர் தொப்பியை வீட்டின் வெளியே மாட்டி வைத்து விட்டால், மற்றவர்கள் உள்ளே செல்ல மாட்டார்கள். 

உத்தர்காண்ட்! 
ராஜோ எனும் இந்த பெண் டேராடூன்-ல் அருகே ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் ஐந்து சகோதரர் களை திருமணம் செய்துள்ளார். இவர்க ளுடன் தான் சந்தோச மாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறார் ராஜோ. 

இவர்களது குடும்பத்தை பொறுத்த வரை இது இவர்களது குடும்பம் பழக்கம் எனவும் இதை பரம்பரை பரம்பரை யாக பின்பற்றி வருவதாகவும் கூறப்படு கிறது. 

இதை எதிர் காலத்திலும் கடை பிடிப்போம் என தெரிவிக் கின்றனர். ராஜோ குறித்த முழுக்கட்டுரை படிக்க... 

தமிழகம்! 
நீலகிரியில் வாழ்ந்து வரும் ஒரு இன / குழு மக்கள் மத்தியில் இப்படி யான சகோதரர் களை திருமணம் செய்துக் கொள்ளும் வினோத வழக்கம் இருக்கிறது என கூறப்படு கிறது. 

ஆனால், இது எந்தளவு உண்மை என்பது தெரிய வில்லை. இது ஒரு செவி வழி செய்தி யாகவே அறியப்பட்டு வருகிறது.
Tags:
Privacy and cookie settings