தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவி !

இயற்கை சீற்றங்களின் போது நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில், புதிய கருவி ஒன்றினை கல்லூரி மாணவிகள் கண்டு பிடித்துள்ளனர். 
தத்தளிக்கும் மீனவர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவி !
திருச்செங்கோடு, விவேகானந்தா கல்லூரி மின்னியல் மற்றும் மின்னனு வியல் துறை மாணவிகள் இந்த கருவியை உருவாக்கி யுள்ளனர். 

வயர்லெஸ் தொழில் நுட்பத் துடன் கூடிய இந்த GPRS கருவி சுமார் 25 கிமீ தூரம் வரை ஒருவித மின் அலையை உருவாக்கும் என்றும், 

இதனைத் தாண்டி மீனவர்கள் செல்லும் போது ஒரு அபாய ஓலியை எழுப்பி பாதுகாப்பு எல்லையை கடப்பதை உணர்த்தும் என்றும் மாணவிகள் தெரிவித் துள்ளனர்.

மேலும், கடலுக்குள் மீனவர்கள் ஆபத்தில் இருப்பதை கரையில் உள்ளவர் களுக்கு இந்த கருவி உணர்த்தும் என்றும், அருகில் உள்ள மீனவர் களுக்கும் இந்த தகவல் செல்லும் என்றும் மாணவிகள் கூறி யுள்ளனர்.

இந்த கருவியை குறைந்த விலையில் 3 ஆயிரம் ரூபாயில் தயாரிக்க முடியும் என தெரிவித் துள்ள மாணவிகள், 
தமிழக மீன் வளத்துறை தங்களது இந்த புதிய தொழில் நுட்ப கருவியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings