சில தினங்களுக்கு முன் 87 மில்லியன் முகநூல் பயன்பாட்டா ளர்களின் தகவல்கள் கசிந்த விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க்கிடம் அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தியது.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா விவகாரம் குறித்து எழுப்பப் பட்ட கேள்வி களுக்கு மார்க் சக்கர்பர்க் அமெரிக்க செனட்டர் களிடம் பதிலளித்தார்.
இந்த விசாரணை யில் ஒவ்வொரு செனட்டர ்களு க்கும் கேள்வி எழுப்புவதற்கு தலா 4 முதல் 5 நிமிடம் வழங்கப் பட்டது.
தற்போது தங்கள் நிறுவனம் போலி கணக்குகளை கண்டு பிடிக்கும் கருவிகளை உருவாக்குவ தாக தெரிவித்தார் மார்க்.
சமூக ஊடகம் எவ்வாறு தீவிரமாக கண்காணிக்கப் படலாம் என அமெரிக்க செனட்டர்கள் மார்க் சக்கர்பர்கிடம் கேள்விகளை கேட்டனர்.
கேள்வி பதில் நேரத்தில் மார்க் சக்கர் பர்க் இந்திய தேர்தல் குறித்தும் விளக்கமளித்தார்.
அமெரிக்க தேர்தல் எந்தவித அழுத்தங் களாலும், பாதிக்கப் படாது என்பதை உறுதி செய்ய அவர் என்ன செய்ய போகிறார் என்று
செனட்டர் ஃபின்ஸ்டின் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மார்க், 2018ஆம் ஆண்டில் இந்த விவகார த்தில் அதிகம் கவனம் செலுத்த போவதாக தெரிவித்தார்.
அமெரிக்கா வில் மட்டு மல்லாமல், மேலும் பல நாடுகளில் தேர்தல் நடக்க விருப்பதால் 2018ஆம் ஆண்டு மிக முக்கியமானது என மார்க் தெரிவித்தார்.
இந்தியா, பாகிஸ்தான், ஐங்கேரி, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகளுக்கு இந்த வருடம் மிக முக்கியமான வருடம் என்றும்,
இந்த நாடுகளில் நடைபெறும் தேர்தல்கள் தங்கள் தரத்தை இழக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்வோம் என்றும் மார்க் சக்கர்பர்க் தெரிவித்தார்.
மேலும், வன்முறை களை தூண்டும் செய்திகளை தடுப்பது, போலி கணக்கு களை கண்டறியும் நடவடிக்கை ஆகிய வற்றை நாங்கள் மேற்கொள்வோம் என அவர் தெரிவித்தார்.
கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனத் தால், 87 மில்லியன் பயன் பாட்டாளர் களின் தகவல்கள்
முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ள தாக ஃபேஸ்புக் நிறுவனம் முன்னதாக ஒப்பு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த விசாரணை யில் ஒவ்வொரு செனட்டர் களுக்கம் கேள்வி எழுப்பு வதற்கு 5 நிமிடத்திற்கும் குறைவான நேரமே வழங்கப் பட்டது எனவும்
ஆகையால் இந்த விசாராணை யில் போதுமான அளவு உண்மைகள் வெளி வரவில்லை என சமூக வலை தளங்களில் குற்றச் சாட்டுகள் எழுப்பட்டு வருகிறது.
மேலும், மைக்ரோ சாஃப்ட் நிறுவன த்தின் தலைவர் பில் கேட்ஸ் 1998 -ம் ஆண்டு கேஃபாவெர் ஹியரிங்ஸ் குழுவை சந்தித்த போது
இருந்த அளவிற்கான அழுத்தம் இந்த விசாரணை யில் இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
நம்பிக்கை மீறல் நடை பெற்றுள்ளது என தனது முகநூல் பதவில் தெரிவித்திருந்தார் மார்க் சக்கர்பர்க். ஃபேஸ்புக்கை தொடங்கியது நான் தான்
எனவே இதில் என்ன நடந்தாலும் நான் தான் பொறுப்பு என்றும் அவர் தெரிவித் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.