குழந்தை இல்லாத காரணத்து க்காக மனைவியைக் கொலை செய்து விட்டு, போலீஸிடம் நாடக மாடிய சென்னை கோயில் குருக்கள் வசமாகச் சிக்கி யுள்ளார்.
காஞ்சி புரத்தைச் சேர்ந்தவர், பாலகணேஷ் என்ற பிரபு. இவர், வடபழனி யில் உள்ள சிவன் கோயிலில் தற்காலிக குருக்க ளாகப் பணியாற்றி வந்தார்.
இவரு க்கும் வேலூர் மாவட்டம் சோளிங்கரைச் சேர்ந்த ஞானப் பிரியாவு க்கும் காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத் துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள், சென்னை வடபழனி தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியி ருப்பில் முதல் தளத்தில் வசித்து வந்தனர்.
கடந்த 5-ம் தேதி கை கால்கள் கட்டப் பட்ட நிலை யில் ஞானப்பிரியா வீட்டுக்குள் கொலை செய்யப் பட்டுக் கிடந்தார்.
பால கணேஷ், கழிவறை யில் கை கால்கள் கட்டப் பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார்.
கழிவறை க்குச் சென்ற வீட்டின் உரிமை யாளர் விஜயலட்சுமி, பால கணேஷ் மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி யடைந்தார். பிறகு, காவல் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
அதன் பேரில், வடபழனி போலீஸார் பால கணேஷிடம் விசாரித் தனர். இந்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட் டுள்ளது.
இது குறித்து போலீஸார் கூறுகை யில், "பால கணேஷு க்கும் ஞானப் பிரியாவு க்கும் திருமணம் முடிந்து மூன்று ஆண்டு களுக்கு மேலாகியும் குழந்தை இல்லை.
இதனால், அடிக்கடி கணவன் மனைவி க்கு இடையே தகராறு ஏற்படும். கடந்த 4-ம் தேதி இரவு குழந்தை யில்லாதது பற்றிய பேச்சால் தகராறு ஏற்பட் டுள்ளது.
இதில் ஆத்திர மடைந்த பால கணேஷ், மனைவியைத் தாக்கி யுள்ளார். அதில், அவர் இறந்து விட்டார்.
கொலையை மறைக்க அதிரடி யாக யோசித்த பால கணேஷ், ஞானப்பிரியா வின் கை, கால்களைக் கயிற்றால் கட்டி, வீட்டுக்குள் உடலை போட் டுள்ளார்.
மனைவியைக் கொலை செய்த குற்றத்துக் காகப் பால கணேஷைக் கைது செய்துள்ளோம்" என்றனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகை யில், "ஞானப் பிரியா கொலை வழக்கில் சிசிடிவி கேமராவில் எந்தப் பதிவும் இல்லை.
இதனால், வீட்டுக்குள் வெளி நபர்கள் யாரும் செல்ல வில்லை என்பதை முதலில் உறுதி செய்தோம்.
இதனால், எங்களின் சந்தேகப் பார்வை யில் பால கணேஷ் இருந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட காயங்களிலும் எங்களு க்கு சந்தேகம் இருந்து வந்தது.
மனைவி யின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி யின் போதும் அவரது நடவடிக்கை களை உன்னிப் பாகக் கவனித்தோம்.
கொலை வழக்கு தொடர்பாக, பால கணேஷ் மற்றும் அவரின் உறவின ர்கள், நண்பர்கள், அடுக்குமாடி குடியிருப் பில் வசிப்பவர்கள் என அனைவரி டமும் விசாரித்தோம்.
அப்போது தான் குழந்தை இல்லாத தால் பால கணேஷு க்கும் ஞானப் பிரியாவு க்கிடையே தகராறு ஏற்படும்
என்ற தகவல் கிடைத்தது. அதன் பிறகு, அது தொடர்பான கேள்வி களை பால கணேஷிடம் கேட்டோம்.
அப்போது, ''என்னுடைய தலையில் கொள்ளை யர்கள் அடித்த தால், அதன் பிறகு எனக்கு எதுவும் தெரியாது'' என்ற தகவலை மட்டும் திரும்பத் திரும்பத் தெரிவித் தார்.
தொடர்ந்து விசாரித்த போது, குழந்தை இல்லாத தால் ஏற்பட்ட தகராறில் மனைவியைக் கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார்.
மேலும், கொலை நடந்த இடத்தில் பதிவான கைரேகை களில் பால கணேஷின் ரேகையும் இன்னொரு நபரின் கைரேகை யும் பதிவாகி யிருந்தன.
பால கணேஷ் மட்டு மல்லாமல், அவரின் நண்பர் ஒருவரு க்கும் இந்தக் கொலை யில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர் மூலம் தான் இந்தக் கொலை சம்பவ த்தைப் பால கணேஷ் நடத்தி யுள்ளார்.
பிறகு, ஒன்றுமே தெரியாதது போல எங்களிடம் நாடக மாடியுள்ளார். எங்களின் விசாரணை யில் அவரது நாடகம் தெரிந்து விட்டது.
ஞானப்பிரியா விடமிருந்த நகைகள், பால கணேஷின் நண்பரிடம் இருக் கிறது. அதைப் பறிமுதல் செய்ய நடவடி க்கை எடுத்து வருகிறோம்" என்றார்.