திருப்பூரில் மான் கறி விற்ற நபர் கைது !

திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்துள்ள வனப்பகுதியில் மான் வேட்டையாடி விற்பனை செய்ய முயன்ற இளைஞரை வனத்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்திருக் கிறார்கள்.
திருப்பூரில் மான் கறி விற்ற நபர் கைது !
திருப்பூர் மாவட்டம் கருவலூரை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். 

இவர் அப்பகுதி வனப்பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, நாய் ஒன்று மான் குட்டியைத் துரத்திக் கொண்டு வந்திருக் கிறது. 

இதைப் பார்த்த சக்திவேல், அந்த நாயை அங்கிருந்து துரத்தி விட்டு, மானை லாவகர மாகப் பிடித்துள்ளார். பின்னர், அந்த மானைக் கொன்று கறியாக விற்பனை செய்யவும் அவர் முயற்சி செய்திருக் கிறார். 

இந்தத் தகவலை உள்ளூர் ஆட்கள் மூலம் கேள்விப் பட்ட மேட்டுப் பாளையம், சிறுமுகை 

மற்றும் திருப்பூர் வனச்சரக ஊழியர்கள், உடனடி யாகச் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, மான் கறியை வைத்திருந்த சக்திவேலை மடக்கிப் பிடித்தனர்.

அப்போது அவரிடம் நீண்ட விசாரணை நடத்திய அதிகாரிகள், பின்னர் அவரைக் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக் கிறார்கள். 
திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா பகுதிகளில் மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், 

சமூக விரோதிக ளால் அவை அடிக்கடி வேட்டை யாடப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதாக வேதனைப் படுகிறார்கள் அப்பகுதி மக்கள்.
Tags:
Privacy and cookie settings