உத்தர பிரதேசம் மாநிலத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள புர்ஸட் கஞ்ச் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு குடும்பத்தி னரிடையே சமீப காலமாக சொத்து தொடர்பான தகராறு நீடித்து வந்துள்ளது.
இந்நிலையில், இந்த தகராறு துவேஷமாக மாறிய நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தனது சகோதரர், அவரது மனைவி மற்றும் மகளை உயிருடன் தீயிட்டு கொளுத்தினார்.
படுகாய மடைந்த அவர்கள் மூவரும் ரேபரேலியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி யில் அனுமதிக்கப் பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அமீன் (45) மற்றும் அவரது மகள் ஆப்ரீன்(18) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Thanks for Your Comments