எம்பி, எம்எல்ஏ க்களுடன் நாளை பேசும் பிரதமர் மோடி !

பாஜகவைச் சேர்ந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் நாளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரை யாடுகிறார் 
எம்பி, எம்எல்ஏ க்களுடன் நாளை பேசும் பிரதமர் மோடி !
பிரதமர் நரேந்திர மோடி. பாஜகவைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு சமூக தளங்களை அதிக அளவில் பயன் படுத்துகிறார். டுவிட்டர், பேஸ் புக்கில் அதிகமானோர் அவரை பின் தொடர்கின்றனர்.

கட்சியின் மூத்த தலைவர்கள், மாநில தலைவர் களுடனும், அவர் அடிக்கடி மின்னணு தகவல் முறைகள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறார். 

பாஜவுக்கு லோக்சபாவில் 274 எம்பி க்கள், ராஜ்யசபா வில் 68 எம்பிக்கள் மற்றும் நாடு முழுவதும், 1455 எம்எல்ஏ க்கள் உள்ளனர். 
இந்த எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏ க்களுடன் நாளை காலை 11 மணிக்கு நரேந்திர மோடி ஆப் மூலம் வீடியோ கான்பரஸ் முறையில் அவர் கலந்துரை யாட உள்ளார். 

இதை பாஜக தெரிவித் துள்ளது. கர்நாடகா வில் சட்டசபை தேர்தல் உள்பட பல அரசியல் பிரச்னைகள் உள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியத் துவம் பெறுகிறது.
Tags:
Privacy and cookie settings