ஐ.ஏ.எஸ். தேர்வை தமிழ் வழிக் கல்வி மூலமாக எழுதி 238-வது இடத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்த
மாணவர் லட்சுமண பெருமாள், நெல்லை ஆட்சியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
தமிழ் வழிக் கல்வி மூலம் ஐ.ஏ.எஸ்
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள விக்கிரம சிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமண பெருமாள்.
இவர் பன்னிரண்டாம் வகுப்பு வரையி லும் தமிழ் வழியி லேயே கல்வி பயின்றார்.
பின்னர் பொறியியல் படிப்பை நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார்.
அதனைத் தொடர்ந்து டி.சி.எஸ் நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்த அவருக்கு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற கனவு இருந்தது.
அதனால் சென்னை யில் உள்ள அரசு ஐ.ஏ.எஸ். கோச்சிங் சென்டரில் சேர்ந்து படித்து வந்தார்.
தமிழ் இலக்கி யத்தில் ஆர்வம் கொண்ட லட்சுமண பெருமாள், தமிழ் மொழி யிலேயே ஆட்சிப் பணிக்கான தேர்வை எழுதினார்.
அதில், அவருக்கு 238-வது இடம் கிடைத்தது. அதனால் மகிழ்ச்சி யடைந்த அவர் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர்
சந்தீப் நந்தூரியை, தனது குடும்பத்தி னருடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் பேசிய லட்சுமண பெருமாள், ''நான் தமிழ் மொழி யிலேயே பள்ளிப் படிப்பை முடித்தேன்.
பின்னர் பொறியியல் பட்டம் பெற்று இரண்டு வருடங்கள் பணியாற்றிய போதிலும்,
சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுவ தற்காகப் பணியி லிருந்து விலகி, தேர்வுக்காகப் படித்தேன்.
தமிழ் மொழியையே நான் தேர்வு செய்ததால், அதில் சிறப்பாகப் படித்தேன். தினமும்
நாளிதழ் களைப் படிப்பதுடன், மொழி சம்பந்தமான பயிற்சி களை எடுத்துக் கொண்டேன்.
கடந்த ஆண்டு நான், தேர்வுகளில் வெற்றி பெற்ற போதிலும் இண்டர் வியூவில் தோல்வி யடைந்து விட்டேன்.
அதனால் மனம் தளர்ந்து விடாமல் மூன்றாவது முறை யாகத் தேர்வு எழுதினேன். அதில் தேர்வாகி யிருப்பது மகிழ்ச்சி யளிக்கிறது.
எனக்கு முழுமை யான ஒத்துழைப்புக் கொடுத்த துடன், எனக்கு ஊக்கம் கொடுத்த
குடும்பத் தினருக்கும் நண்பர் களுக்கும் இந்தச் சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது குடும்பத்தினர் அனைவருமே கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்ப வர்கள்.
அதனால் நான் ஐ.ஏ.எஸ் ஆனதும் கல்விக்கு அதிக முக்கியத் துவம் கொடுப்பேன்.
அனைவரு க்கும் கல்வி கிடைக்க வேண்டியது அடிப்படை உரிமை என்பதால் அதற்கான முயற்சி களை மேற்கொள்வேன்.
அத்துடன், சுற்றுச் சூழலுக்கும் அதிக அக்கறை செலுத்துவேன். பயிற்சியும் விடா முயற்சியும் இருந்தால்
எந்தத் தேர்விலும் எளிதாக வெற்றி கொள்ள முடியும் என்பதற்கு நானே உதாரண மாக இருக்கிறேன்.
அதனால் மாணவர்கள் கவனமுடன் தங்களுடையே துறை களைத் தேர்வு செய்து படிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.