உத்தர பிரதேசத் தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய நகரம் ராம்நகர். இங்கு வீடுகளுக்கு கழிப்பறை கட்டு வதற்கு அரசு நிதி உதவி கிடைக்க தாமதம் ஏற்பட்டது.
இதை யடுத்து மக்கள் ஒன்று திரண்டு வட்டார வளர்ச்சி அதிகாரி அலுவலகம் முன் போராட்டம் நடத்தி னார்கள்.
அதிகாரியை சந்திக்க வேண்டும் என்று வேண்டு கோள் விடுத்தனர். இதற்காக நாள் முழுவதும் வெயிலில் காத்து கிடந்தனர்.
ஆனால் அலுவலக த்தில் இருந்து வெளியில் வந்த அதிகாரி கவுதம் போராட்டக் காரர்களை சந்திக்க மறுத்த துடன் தனது காரில் ஏறி புறப் பட்டார்.
இதனால் ஆவேசம் அடைந்த போராட்டக் காரர்கள் அதிகாரி காரை மறிக்க முயன்றனர். ஆனால் காரை வேகமாக டிரைவர் ஓட்டிச் சென்றார்.
அப்போது பிரிஜ்மால் என்ற வாலிபர் அதிகாரி யின் காரின் முன் பகுதியில் தொற்றிக் கொண்டு காரை செல்ல விடாமல் நிறுத்த முயன்றார்.
என்றாலும் காரை நிறுத்தா மல் டிரைவர் 4 கி.மீ. தூரத்துக்கு ஓட்டிச் சென்றார். அதுவரை வாலிபரும் தொற்றிக் கொண்டே சென்றார்.
கடைசியில் சோதனைச் சாவடி யில் கார் நின்றதும் வாலிபர் இறங்கி கொண்டார்.
காரில் தொங்கிய படி செல்லும் போதே வாலிபர் ஒரு கையால் செல்போனில் பேசியபடி உயர் அதிகாரி களுக்கு தகவல் கொடுத்தார்.
இந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது. இது தொடர் பாக வாலிபர் மீதும் அதிகாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து ள்ளனர்.
மாவட்ட கலெக்டரும் இது பற்றி விசாரிக்க 3 பேர் குழுவை நியமித்து உத்தர விட்டுள்ளார்.
Thanks for Your Comments