எங்கள் மகள் கொலையில் சந்தேகம் உள்ளது... வேல்விழி பெற்றோர் !

கொலை, கொள்ளை, ஆள் மாயம், கடத்தல் போன்ற சம்பவங்களில் சில புகார்களின் மீது போலீசார் எடுக்கும் நடவடிக்கையை ஆராய்ந்தால், அதிர்ச்சி தான் விடையாகக் கிடைக்கிறது.  
எங்கள் மகள் கொலையில் சந்தேகம் உள்ளது... வேல்விழி பெற்றோர் !
உரிய நடவடி க்கையை உடனே மேற்கொண்டாலே பல குற்றங்கள் நடை பெறாமல் தடுக்கப்பட்டு விடும். 

குறிப்பாகக் 'குழந்தைகள் மற்றும் பெண்கள் மாயம்' என்ற புகார்களின் மீது துரித நடவடி க்கைக்கான அவசியத்தை ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும் புரிந்து கொள்ள முடியும். 

சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில், 'இளம் பெண், வேல்விழி மாயம்' என்று கடந்த 9 ஆம் தேதி புகார் அளிக்கப்ப ட்டிருக் கிறது. 

18 ஆம் தேதி, வேல் விழியின் சடலம் தான் அழுகிய நிலையில் மீட்கப் பட்டிருக்கிறது. 

கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தைச் சேர்ந்த வேல்விழி, சென்னை சூளைமேடு, வீரபாண்டி தெருவில் தங்கி யிருந்து 'நர்சிங்' படித்து வந்திருக் கிறார். 

அன்றாடம் காலையும், மாலையும் மகளிடம் போனில் பேசி விடும் தந்தை ராஜேந்திரன், கடந்த 6 ஆம் தேதி பேச முயன்ற போது, வேல் விழியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியுள்ளது. 
இரண்டு நாள் தேடலுக்குப் பிறகு கடந்த 9-ம் தேதி காவல் நிலையத் தில் புகார் அளித்தி ருக்கிறார். 

ஏற்கெனவே, 'வாதியால் தாமதம்' என்று புகாரைப் பெற்றுக் கொண்ட சூளைமேடு போலீசார், அடுத்த பத்து நாள்களில் மேற்கொண்ட புலனாய்வு தான் என்ன?

வேல் விழிபுகார் வாங்குவதில் சிக்கல்

பெண் மாயம் என்று புகாரைக் கொடுக்கப் போனால், "உறவினர் வீடுகளில் தேடிப் பாருங்கள். உங்கள் பெண்ணின் தோழிகளிடம் கேளுங்கள். 

யாரிடம் அதிக நேரம் போனில் பேசுவார் என்று விசாரித்துச் சொல்லுங்கள். காதல் தொடர்பு ஏதாவது இருக்கிறதா என்று அவர் தோழிகளிடம் கேளுங்கள். 

திருமண த்துக்கு நீங்கள் ஏதேனும் தடை போட்டீர்களா, வீட்டில் ஏதாவது சண்டை போட்டீர்களா என்று ஞாபகப்படுத்திச் சொல்லுங்கள் 

என்பது தான் பெரும் பாலான காவல் நிலையங்களின் வழி காட்டுதலாக இருக்கிறது. 
தரம் கருதியே நாம் ஒழுங்கான வார்த்தை களில் போலீசாரின் வழி காட்டுதலைப் போட்டுள்ளோம். 

உண்மையில் அவர்கள் பேசும் தொனியே வேறு ரகம் தான். கடைசியாக, "கால காலத்தில் உங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைத்தி ருந்தால், 

இப்படி அழும் நிலைமை வந்திருக்குமா ?" என்றக் கேள்வியைக் கேட்காமல் போலீசார் விடுவ தில்லை.

கைதான அஜீத்குமார் காவல் எல்லை பஞ்சாயத்து...

காவல் நிலையத்தில் இத்தனை சோதனை களுக்கு அப்பாலும் இன்னொரு சோதனை இருக்கிறது...  அது தான் எல்லை (லிமிட்) சோதனை. சார், வீட்டி லிருந்து உங்கள் மகள் காணாமல் போனதாகச் சொல்கிறீர்கள். 

வீட்டி லிருந்து அவர் அலுவலகம் போகும் வழியில் இரண்டு இடங்களில் நின்று யாருக்கோ போன் செய்திருக் கிறார். அதன் பின்னர் தான் காணாமல் போயுள்ளார். 

அவர் போன் செய்த முதல் இடம் Dash போலீஸ் லிமிட்டில் வருகிறது. இரண்டாவது இடம் Dash போலீஸ் லிமிட்டில் வருகிறது. ஆகவே, இந்த விவகார த்தை நாங்கள் விசாரிக்க முடியாது. 
அந்த இரண்டு காவல் நிலைய த்தில் ஏதாவது ஒன்றில் தான் விசாரிக்க முடியும்" என்று சுற்றலில் விடும் அநியா யங்களும் நடக்காமல் இல்லை. 

'காவல் நிலைய எல்லையைக் கணக்கில் கொள்ளாமல், பாதிக்கப் பட்ட நபரின் அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எந்தக் காவல் நிலைய த்திலும் புகாரை வாங்கலாம்' என்று சென்னை போலீஸ் கமிஷனரும், 

மாநில போலீஸ் டி.ஜி.பி-யும் காவல் நிலையங் களுக்கு அறி வுறுத்தல் செய்தும் இந்த நிலை தொடர்கிறது.

போலீஸ் என்ன சொல்கிறது ?

சூளைமேடு போலீஸார், "வேல் விழியின் தோழியான மகா லட்சுமியின் காதல் கணவன் தான், வேல் விழியின் நகைகளுக் காக அவரைக் கொலை செய்தார். 

அந்த நகைகளை விற்று மனைவி மகாலட்சுமி பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடினார். நகைகளைக் கைப்பற்றி விட்டோம். 

வேல் விழியின் உடலை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒளித்து வைத்துள்ள தாக வேல் முருகன் ஒப்புக் கொண்டு விட்டார். 
வேல்விழி உடலைக் கைப்பற்றி விசாரித்து வருகிறோம் என்று கொலைக்கான காரணத்தைச் சொல்கிறார்கள்.

கொலையில் அடுத்த சந்தேகம் !

சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் உடற்கூறு ஆய்வுக் காக வேல் விழியின் நைந்து போன உடல் வைக்கப் பட்டுள்ளது. 

சென்னை க்கு வந்துள்ள வேல் விழியின் பெற்றோர், உடற்கூறு ஆய்வுக்கு நாங்கள் சம்மதிக்க மாட்டோம் என்று எதிர்ப்புத் தெரிவித் துள்ளதால், உடற்கூறு ஆய்வு நடப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

"வேல்விழி பணியாற்றிய மருத்துவ மனையின் மருத்துவர்கள் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. 
எங்கள் மகளை, அஜீத்குமார் ஒருவரே கொலை செய்திருப்பார் என்பதையும், நகைக்காக மட்டுமே இந்தக் கொலை நடந்திருப் பதாகச் சொல்வதையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்கின்றனர் வேல் விழியின் பெற்றோர்.

கல்லூரி நிர்வாகம் மறுப்பு

வேல் விழியின் பெற்றோர் முன் வைக்கும் குற்றச் சாட்டுகளை, கல்லூரி நிர்வாகம் (விருத்தாசலம், சென்னை கிளை) மறுத்துள்ளது. 

"நர்ஸிங் மாணவிகள் நான்கு பேரை பயிற்சிக்காக அமைந்த கரையில் உள்ள ஒரு கிளீனிக்கு க்கு அண்மையில் நாங்கள் அனுப்பி வைத்தோம். 

அங்கே உணவு, தங்கும் இடம் அனைத்தும் இலவசம் என்று சொல்லி, பின்னர் அங்கே கட்டணம் வசூலித்த தால், நர்ஸிங் மாணவிகள் நான்கு பேரும் வேறு இடத்துக்கு பயிற்சி க்குப் போய் விட்டனர். 

இது குறித்து அவர்கள் பெற்றோரிடம் வருத்தப் பட்டுச் சொல்லி யிருப்பார்கள் போலிருக் கிறது. ஆனால், இந்தக் காரணங் களுக்காக எங்கள் மீது இவ்வளவு பெரிய பழியைப் போடக் கூடாது..." என்கிறது. 
வேல்விழி கொலை யின் பின்னணியில் மறைக்கப் பட்ட ரகசியம் இருக்கிறது.  அதை போலீஸார் தான் உடைத்து வீச வேண்டும். 

அப்போது தான் 19 வயது மகளை இழந்துத் தவிக்கும் பெற்றோரு க்கு சில வாரங்கள் கழித்தாவது நிம்மதி யான உறக்கம் வரும்...!
Tags:
Privacy and cookie settings