பொதுவாக முதிர்ச்சி யின்மை அல்லது கூடா நட்பு ஆகியவை களின் காரணத் தால் எடுக்கப்படும் முடிவுகள் அதாளப் பாதாளத்தில் தள்ளி விடும்.
இதையே நம் தமிழ் மண்ணில் ஒன்னு சுய புத்தி இருக்கனும் அல்லது சொல் புத்தி இருக்கனும் என நகரீகமாக சொல்வார்கள்.
கடந்த வருடம் சவுதியில் உடனிருக்கும் மனைவி, குழந்தை, பெற்றோர் போன்ற உறவுகளை தன்னோடு ரெஸி டென்ஷியல் விசாக்களில் வைத்துக் கொள்ள லெவி எனப்படும் வரி மாதந்தோறும் கட்டும் வரி அறிமுகப் படுத்தப் பட்டது.
மேலும், வெளிநாட்டு ஊழியர் களை வேலைக்கு அமர்த்தும் கம்பெனிகள் மீது வரிகள் விதிக்கப் பட்டன.
மேலும், 2018 ஜனவரி முதல் 5 சதவிகித வாட் வரியும் அறிமுகப் படுத்தப்பட்ட துடன் தண்ணீர், மின்சாரம், சில்லறை பெட்ரோல் விலை என சகட்டுமேனிக்கு உயர்த்தப் பட்டது.
மேற்காணும் நடவடிக்கை களால் பல வெளி நாட்டினர் தாக்குப் பிடிக்க இயலாதோர் வேலையை இழந்து அல்லது உதறிவிட்டு வெளியே றினர்.
குழந்தை பள்ளிக்கூடத்தில் படிக்கும் நிலையில் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண் டவர்கள் மார்ச் மாதத்துடன் இவ்வருட கல்வியாண்டு நிறை வடைதை யொட்டி,
பெருமளவில் வெளியேற வுள்ளதால் பெரும் பாலான பள்ளிக் கூடங்கள் சரிபாதி மாணவர்களை இழக்க நேரிடலாம் என அஞ்சப் படுகிறது.
இந்த வருமான இழப்பை ஈடுகட்ட கட்டணத்தையும் உயர்த்த முடியாமல் பள்ளிக்கூட நிர்வாகங்கள் தவிக்கின்றன, உயர்த்தினால் எஞ்சியோரும் செல்லக் கூடும்.
இன்னொரு புறம் குடும்பமாய் வாழ்ந்தவர் களில் பலரும் மின்னல் வேகத்தில் வீடுகளை காலி செய்து வருகின்றன. இதனால் ரியல் எஸ்டேட் துறையும் பலத்த அடிவாங்கி வருகிறது.
தண்ணீர் மற்றும் மின்சார கட்டணங்களை வாடகைக்கு குடியிருப்போரே செலுத்து வதாக ஒப்புக் கொண்டால் வாடகையில் கணிசமாக குறைப்பதாக வீட்டின் உரிமை யாளர்கள் சலுகை வழங்க முன் வந்துள்ளனர்.
அதே வேளை சவுதியர்கள் வாடகை வீடுகள் குடியிருப்பதை விட அரசு கட்டித் தரும் வீடுகளுக்கு செல்வதையே விரும்புவதால் இன்னும் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இன்னொரு புறம் மேலை நாடுகளி லிருந்து ஆயுதம் வாங்கிக் குவிக்கும் நடவடிக்கை களும், சொகுசு நகரங்கள் கட்டும் திட்டங்களும், மகாராணிக் களைப் போல் வீட்டில் வைத்து போற்றி பாது காக்கப்பட வேண்டிய பெண்களும் வீட்டை விட்டு வெளியேறி
ஆண்களுடன் போட்டி யிட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற நிலையும் மேற்கத்திய நாகரீக த்தின் பெயரால் உருவாக்கப் பட்டுள்ளது.