திருப்பாலை குடியில் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கடல் உள் வாங்கி இருப்ப தால் மீனவ மக்கள் அச்சத்தில் ஆழ்ந்து ள்ளனர்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தினங்களில் கன்னியா குமரி மற்றும் ராமநாதபுரம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும், மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர்
சத்ய கோபால் எச்சரிக்கை கடந்த இரு தினங் களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தி ருந்தார். அத்துடன் கடலுக்கள் யாரும் செல்ல வேண்டாம், கடலில் யாரும் குளிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தி யிருந்தார்.
அதன்படி, தென் தமிழக த்தின் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் குறிப்பாக கன்னியா குமரி, ராமநாதபுரம் கடற் பகுதியில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது.
குமரி மாவட்ட த்தில் கடலலையோ 10 முதல் 15 அடி உயரம் மேலெழுந்து வருகிறது. 18 மீனவ கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதுடன், 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல்நீர் புகுந்து அவதிக் குள்ளாகி யுள்ளனர்.
இதனால் 6 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப் பட்டு அங்கு பாதிக்கப் பட்டவர்களை தங்க வைக்கும் நடவடிக் கைகளில் மாவட்ட ஆட்சியர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலை யில், இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலை குடியில் ஒரு கிலோ மீட்டரு க்கு மேல் கடல் உள் வாங்கி காணப் படுகிறது.
இதனால் கடல்நீர் எந்நேரமும் ஊருக்குள் நுழைந்து விடுமோ என்ற கவலை யில் மீனவ மக்கள் ஆழ்ந் துள்ளனர்.
இதனிடையே, அறிவுறுத் தலையும் மீறி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் குளிக்க முயன்ற வர்களை ஒலிபெருக்க வாயிலாக கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் எச்சரித்தனர்.
எச்சரிக்கை யையும் மீறி நீராடிய வர்களை பாதுகாப்பாக வெளியேற் றினர்.