பெரம்பலூர் அருகே உதவி காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் என்ற கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடையில் மதியழகன் என்பவர் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் விற்பனையை முடித்து விட்டு மதியழகன் கடைக்குள் அமர்ந்து வசூல் கணக்கை பார்த்துக் கொண்டி ருந்தார்.
அப்போது அங்கு வந்த உதவி ஆய்வாளர் அசார், விதிமீறி இரவில் மது விற்பனை செய்வ தாக கூறி மதியழகனை தாக்கிய தாக கூறப் படுகிறது.
இதில் காயம் அடைந்த மதியழகன், உடனடி யாக பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.
காவலர் சீருடை யின்றி அத்துமீறி டாஸ்மாக் ஊழியரை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாஸ்மாக் பணி யாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.