கஞ்சா மற்றும் தங்கக் கடத்தல் பரபரப்பில் ராமேஸ்வரம் !

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கடத்த வர முயன்ற ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தினையும், மண்டபம் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
கஞ்சா மற்றும் தங்கக் கடத்தல் பரபரப்பில் ராமேஸ்வரம் !
இந்த கடத்தல்கள் தொடர்பாக 7 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை கடற் படையினர் நடுக்கடலில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பிளாஸ்டிக் படகு ஒன்று தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த இலங்கை கடற் படையினர் அந்த படகை விரட்டி பிடித்து சோதனை யிட்டனர். 

அதில் ஒன்றரை ரூபாய் மதிப்புள்ள 2.60 கிலோ தங்கம் இருந்ததை கண்ட றிந்தனர். அவற்றின் மதிப்பு சர்வதேச சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 

அவற்றினை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அதே போல, மண்டபம் பகுதியை அடுத்துள்ள வேதாளை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 
அப்போது, 3 கார்களில் 136 கிலோ கஞ்சா பார்சல்கள் மறைத்து வைக்கப் பட்டிருப்பது கண்டறிந்தனர். அதாவது இதன் மதிப்பு 2 கோடி இருக்கும் என கூறப்படு கிறது. 

இதை யடுத்து, அவற்றை கைப்பற்றிய போலீசார், அது தொடர்பாக 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண் டனர். 

இலங்கை- இந்தியா இடையே தங்கம், கஞ்சா கடத்துவது தொடர் கதையாகி விட்டது. 

எவ்வளவு தான் இருதரப்பு கடற்படை யினர் விழிப்பாக இருந்தா லும் பலத்த கட்டுப்பாடு, கண்காணி ப்பையும் மீறி கடத்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
ஒன்றரை கோடி தங்கமும், 2 கோடி கஞ்சாவும் பிடிபட்டு ள்ளதால், இவை இரண்டி ற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமா என போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings