சல்மான் கான் குற்றவாளி... மான் வேட்டை !

0
பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் நடிப்பில் கொடி கட்டி பறந்தாலும் பல்வேறு சர்ச்சைகளிலும் இவர் சிக்கி கொண்டவர். அவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கின்றன. அதில் மான்களை வேட்டை யாடிய வழக்கும் ஒன்றாகும்.
சல்மான் கான் குற்றவாளி... மான் வேட்டை !
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே உள்ள கான்களி கிராமத்தில் “ஹம் சாத் சாத் ஹயன்” என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு 1998-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.

அன்று இரவு அரிய வகை மான்கள் இரண்டை படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான் கான் வேட்டை யாடியதாக குற்றம் சாட்டப் பட்டது. இதே போல நடிகர் சயீப்அலி கான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப் பட்டது.

இது தொடர்பாக ஜோத்பூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடரப் பட்டது. இந்த வழக்கில் இறுதிக் கட்ட வாதம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ந் தேதி தொடங்கியது. 

அரசு தரப்பிலான வாதம் அக்டோபர் 23-ந்தேதி முடி வடைந்தது. சல்மான் கான் தரப்பிலான வாதம் அக்டோபர் 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந் தேதி வரை நடந்தது.

குற்றம் சாட்டப் பட்ட மற்றவர் களின் வாதமும் கடந்த 24-ந் தேதி யுடன் முடி வடைந்தது. அனைத்து தரப்பின் இறுதி வாதம் முடிவடை ந்ததை தொடர்ந்து 5-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று ஜோத்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு அறிவித்தது. 
அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, மான்வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என அறிவித்தார். குற்றம் சாட்டப்பட் மற்ற அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர்.

தீர்ப்பு வெளி யாவதை யொட்டி சல்மான் கான் தனது பாதுகாவல ருடன் கோர்ட்டு க்கு வந்திருந்தார். அவர் குற்றவாளி என அறிவிக்கப் பட்டதால் அவர் உடனடியாக கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

சல்மான் கான் மீதான கடைசி மான்வேட்டை வழக்கு இதுவாகும். கடந்த ஆண்டு ஆயுத சட்ட வழக்கில் அவரை ஜோத்பூர் கோர்ட்டு விடுவித்து இருந்தது. 

மேலும் சின்கரா மான்வேட்டை வழக்கிலும் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings