யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு !

0
கலிப்போர்னியா மாகாணத்திலுள்ள யூ டியூப் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும், 
யூ டியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு !
துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னை தானே சுட்டுக் கொன்று இறந்ததாகவும் அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி கூறும் போது, கலிபோர்னியா மாகாணத் திலுள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடு நடத்தினார். 

இதில் 3 பேர் காய மடைந்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு அப்பெண் தன்னை தானே சுட்டுக் கொன்று இறந்து விட்டார். 

அப்பெண் யார் என்ற தகவல் இது வரை தெரிய வில்லை. அப்பெண்ணுடன் உடனிருந்த ஆண் நண்பர் ஒருவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.
யூ டியூப் அலுவலக பணியாளர் வாதிம் லவ்ருசிக் கூறும் போது, அலுவலக த்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. 

நான் எனது மேசையி லிருந்து எழுந்து விட்டேன். தற்போது சக பணியாளர் களுடம் ஒரு அறையில் உள்ளேன்" என்றார்.

யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி செல்வதற் காக பணி யாளர்கள் ஓடும் காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட் டுள்ளன.

துப்பாக்கிச் சூடு நாந்த யூ ட்யூப் தலைமையக த்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்கா போலீஸார் விசாரணை யில் ஈடு பட்டுள்ளனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings