சிக்னல் பலூன் விற்கும் சிறுவன் !

0
அந்தப் பேருந்தில் தினசரி அலுவல் காரணமாக அன்றும் சென்று கொண்டி ருந்தேன். அந்தச் சிறுவர்கள் இரண்டு கைகளி லும் 
சிக்னல் பலூன் விற்கும் சிறுவன்
பல வகையான புத்தகங் களை ஏந்தியபடி, விற்கும் முனைப்பில் அவற்றைப் பற்றிய சிறப்புகளைக் கூறிக் கொண்டிரு ந்தனர். 

பலரும் மொபைலி லிருந்து கண்களைச் சிறிதும் அகற்றாமல் கைகளை ஆட்டி வேண்டாம் என்கிறார்கள். 

அந்தச் சிறுவ ர்களும் பழகிப் போன அனிச்சை யால் கடந்து, அடுத்த வரிடம் செல்கிறார்கள். 

அவர்களு க்கு 10 அல்லது 11 வயது தான் இருக்கும். அப்போது, மொபைலில் ஒரு நோட்டிஃபிகேஷன்... 

இன்று (ஏப்ரல் 12) `சர்வதேசச் சாலையோரச் சிறார் தினம்' (International Day For Street Children) என்று சொல்கிறது.
தினமும் இது போன்ற பல சிறுவர் களைச் சாலையோரம் காண்கிறோம். ஒரு நாளேனும் அவர்கள் வாழ்க்கை எப்படியானது என யோசித்திருக் கிறோமா? 

சிக்னலில் பலூன் விற்கும் சிறுவன் உறங்குவது எங்கே என்று கவலைப் படுவர்கள் எத்தனை பேர்? மூன்று வேளை உணவு, 
உடுத்தத் துணிமணி எல்லாம் நமக்கு நம் பெற்றோர் களால் கொடுக்கப் படுகிறது, அவர்களுக்கு? 

சாலையோரக் சிறுவர் களுக்கும் உரிமையைப் பெற்றுத்தர உருவாக்கப் பட்டதே, `சர்வதேசச் சாலையோரச் சிறார் தினம்'. 

உண்ண உணவும், உடுக்க உடையுமின்றி தவிப்பவர் களுக்கு உரிமை ஏது? சர்வதேச அளவில் குழந்தைகள் உரிமைக்காகப் பல திட்டங்கள், 

சட்டங்கள் உள்ளன. பெரும் பாலான அரசுகள், இந்தச் சாலையோர சிறுவர்களைக் கணக்கில் கொள்வ தில்லை.

காலையில் வீட்டி லிருந்து கிளம்பி மாலையில் வீடு திரும்புவ தற்குள் மணிக்கு ஒரு முறை தகவல் தெரிவிக்கப் படும் 

பாதுகாப்பான சூழ்நிலை யில் வளரும் குழந்தைகளே, திடீரென காணாமல் போகிறார்கள். 
சுங்க சாவடியில் பாஸ்ட் டேக் கார்டை பயன்படுத்துவது எப்படி?
கேட்பாரற்று தெருவில் சுற்றித் திரியும் இவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே தெரிந்திருக்க வாய்ப் பில்லை. தினசரி வாழ்க்கையே இவர்களு க்குப் போராட்ட மானது. 

பசி, பட்டினி ஒரு பக்கம், எப்போது யாரால் ஆபத்து வரும் என்று தெரியாத சூழ்நிலை இன்னொரு பக்கம்.
உலகம் முழுக்க 100 மில்லியன் சாலையோரக் குழந்தைகள் இருப்ப தாகத் தெரிவிக் கிறது யுனிசெஃப். இதில், 

இந்தியா வில் மட்டும் 18 மில்லியன் சாலையோரக் குழந்தை களாம். இவர்கள் அனைவரும் 5 முதல் 18 வயதுக்குட் பட்டவர்கள். 

யார் இந்தக் குழந்தைகள்? எப்படி உருவா கிறார்கள்? ஏழ்மை, வன்முறை, இயற்கைப் பேரழிவு, போர் மற்றும் குடும்பத்து க்குள் பிரிவு என 

ஏதேனும் ஒன்றினால் ஒரு குழந்தை இறையாக்கப் பட்டால், அது சாலை யோரக் குழந்தை யாக மாறுகிறது. 

இவர்களைப் பாதுகாக்க யாரும் கிடையாது. இவர்கள் வாழ்வதற் கான வாழ்வா தாரம் கிடையாது. 

பிச்சை எடுத்தும், ஒருவரிடம் அடிமைப் பட்டும் தினம் தினம் உயிர் மட்டுமே வாழ்வார்கள்.

2011-ம் ஆண்டில், இந்தியாவில் பலதரப்பட்ட கொடுமை களுக்கும் பாதிப்பு களுக்கும் ஆளான குழந்தை களைப் பற்றி தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வெளி யிட்டது. 
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் சாப்பிடாதீங்க !
அதன் ஒவ்வொரு வரியும் அதிர்ச்சி யளிக்கிறது. வருடம் தோறும் 5500 குழந்தை கள், பாலியல் ரீதியாகத் துன் புறுத்தப்படு கிறார்கள். 1500 குழந்தை கள் கொல்லப்படு கிறார்கள். 

இதில், கொடுமை யான விஷயம், இந்தப் பட்டியலில் சாலையோரச் சிறுவர் களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட வில்லை. 
10 சதவிகிதம் கூட அவர்களு க்கு எதிரான வன் முறைகள் பதிவு செய்யப்படுவ தில்லை. 

அவர்களுக் காகக் காவல் நிலையம் செல்லவோ, நீதிமன்றத்தை நாடவோ யார் இருக்கி றார்கள்?

ஒவ்வொரு மாநிலத்தி லும் லட்சத்தின் எண்ணிக்கை யில் சாலை யோரக் குழந்தைகள் இருக்கி றார்கள். 

ஆனால், அரசாங்கப் பதிவேட்டில் இருப்பதோ ஆயிரத்து க்கும் குறைவான பதிவுகளே. 

1993-ம் ஆண்டு வரை சாலையோரக் குழந்தைகள் என்ற வார்த்தையே அரசாங்கப் பதிவேட்டில் இல்லை. 

பல தன்னார்வ நிறுவனங் களின் தொடர் முயற்சியால், அவர்களுக் கான தனிப் பிரிவு உருவாக்கப் பட்டு, சட்டம் இயற்றப் பட்டது. 

ஆனால், இன்று வரை அந்தச் சட்டங்களால் சாலையோரக் குழந்தை களுக்கு ஏற்படும் வன்முறை களைத் தடுக்க முடிய வில்லை.
அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ
இன்று சர்வதேசச் சாலையோரச் சிறுவர்கள் தினத்தை (International Day For Street Children) அனுசரிக் கிறோம். 
தினங்கள் பற்றி அன்று ஒரு நாள் மட்டும் பேசுவது எந்த வகையிலும் பலன் தரப்போவ தில்லை. மாற்றம் ஒவ்வொருவர் மனதிலி ருந்தும் வர வேண்டும். 

சாலையோரச் சிறுவர் களுக்குத் தேடிச் சென்று உதவி செய்யா விட்டாலும், உதாசீனப் படுத்தாமல் இருக்கலாம். 

அவர்களு க்கு எதிரான வன்முறை களைத் தடுக்க, திட்டங் களைச் சரியாக முன்னெடுக்க வேண்டும். 

ஏனெனில், தங்களுக்கு என்ன நிகழ்கின்றது என்றே தெரியா மலேயே அவர்கள் தினம் தினம் வதைபடு கிறார்கள். 
இலங்கையில் 4 வருடத்துக்கு முன் இவர் ஒரு ஸீரோ ஆனால் இப்போ தெரியுமா?
இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக் கொண்டிரு க்கும் நேரத்திலும் பல குழந்தைகள் வன் முறையைச் சந்தித்துக் கொண்டிருக்க லாம். இனியும் இந்த அவலம் தொடரக் கூடாது. 

அதற்கான பங்களிப்பை ஒவ்வொரு வரும் செய்ய வேண்டும். இது, மனிதாபி மானமோ சேவையோ அல்ல; ஒவ்வொரு வரின் கடமை.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings